உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக விளங்கும் விராட் கோலி இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார். கோலி களத்திற்கு வந்தாலே பல பேருக்கு நடுக்கம் ஏற்படும் என்று கூறும் வகையில் ஆக்ரோஷமாக விளையாடக்கூடிய வீரர்களில் ஒருவராக இவர் இருக்கிறார்.
ஆரம்ப காலகட்டத்தில் தன்னுடைய உடலைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாத கோலி, போக போக கடினமான உடற்பயிற்சியின் மூலம் ஒரு கிரிக்கெட் வீரர் தன் உடம்பை எப்படி வடிவமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளார்.
பேட்டிங்கில் எப்படி கோலி அதிரடி காட்டுகிறாரோ அதேபோல் வந்து வீச்சிலும் அவருக்கு அபாரமான திறமை உள்ளது என்று இந்திய வீரர்கள் சிலர் கூறுவது உண்டு. அப்படி விராட் கோலியின் வந்து வீச்சு குறித்து புவனேஸ்வர் குமார் கூறியுள்ள ஒரு கருத்து தற்போது வைரல் ஆகியுள்ளது.
இது பற்றி சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் புவனேஸ்வர் குமார் கூறுகையில், விராட் கோலி வலைப்பயிற்சியில் பந்து வீசும் போது எங்கள் அனைவருக்குமே சிறிது பயம் உண்டாகும் ஏனென்றால் அவர் பந்து வீசும் முறை அவ்வளவு கடினமானது. அதன் காரணமாக அவருக்கு உடலில் ஏதும் காயம் ஏற்பட்டுவிடக்கூடாது என்று நாங்கள் எண்ணுவதுண்டு.
இந்திய அணியில் தான் தான் சிறந்த பந்துவீச்சாளர் என்று விராட் கோலி தன்னை கருதுவதுண்டு. அவருக்கு அவரின் பந்துவீச்சு மேல் அவ்வளவு நம்பிக்கை உள்ளது என்று புவனேஸ்வர் குமார் நகைச்சுவையாக கூறியுள்ளார். புவனேஸ்வர் குமாரின் இந்த கருத்து வேடிக்கையாக இருந்தாலும், கோலிக்கு கிரிக்கெட்டின் மீது உள்ள ஆற்வம் அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என்றே கூற வேண்டும்.
விராட் கோலி தனது கிரிக்கெட் பயணத்தில் இதுவரை பல சாதனைகளை படைத்துள்ளார். அவரது இடைவிடா உழைப்பும் , கடின முயற்சியுமே அவரது மகத்தான வெற்றியின் ரகசியமாகும். இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 76 சதங்களை அடித்துள்ள அவர், சாதனைகளில் எண்ணிக்கையில் சச்சினுக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.