- Advertisement 3-
Homeவிளையாட்டுவந்தாச்சு.. 17 வது ஐபிஎல் சீசனோட அட்டவணை.. முதல் 15 நாட்கள் நடைபெறும் 21 போட்டிகளின்...

வந்தாச்சு.. 17 வது ஐபிஎல் சீசனோட அட்டவணை.. முதல் 15 நாட்கள் நடைபெறும் 21 போட்டிகளின் முழு விவரம்..

- Advertisement 1-

ரசிகர்கள் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்து வந்த ஐபிஎல் தொடர் பற்றிய முக்கியமான அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் உள்ளிட்ட 10 அணிகள் தற்போது ஐபிஎல் தொடரில் ஆடி வருகிறது. முன்னதாக கடந்த 2021 ஆம் ஆண்டு வரை 8 அணிகள் தான் ஐபிஎல் தொடரில் இடம்பிடித்திருந்தது.

இதனையடுத்து கடந்த இரண்டு சீசன்களில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் என இரண்டு அணிகள் இணைந்திருந்தது. இந்த இரண்டு அணிகளுமே இரண்டு முறையும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டிருந்தது. அதில் இன்னொரு படி மேலே போய் இறுதி போட்டி வரை முன்னேறிய குஜராத் டைட்டன்ஸ் அணி, 2022 ஆம் ஆண்டிலேயே ஐபிஎல் கோப்பையை வென்றிருந்தது.

தொடர்ந்து கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக தோல்வியை தழுவி கோப்பையை இரண்டாவது முறை வெல்லும் வாய்ப்பை இழந்திருந்தது குஜராத் அணி. இதனைத் தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம், கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் நடந்திருந்தது. இதில் ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் ஆகிய இரண்டு பேரும் 20 கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் போய் வரலாறு படைத்திருந்தனர்.

அது மட்டுமில்லாமல், உலக கோப்பைத் தொடர்களில் கலக்கிய ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், ஓமர்சாய் உள்ளிட்ட பல வீரர்களும் இந்த முறை ஐபிஎல் தொடரில் இடம்பெற்றுள்ளனர். அதே போல, உள்ளூர் இளம் வீரர்கள் பலரும் கூட ஐபிஎலில் கால் பதித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆரவாரத்தை உண்டு பண்ணி உள்ளது.

- Advertisement 2-

இந்த நிலையில், தற்போது முதல் 15 நாட்களுக்கான 21 ஐபிஎல் போட்டிகளின் அட்டவணை வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் இந்த முறை நடைபெற உள்ளதால் அதனை கருத்தில் கொண்டு, முதல் 15 நாட்களுக்கான ஐபிஎல் அட்டவணையை அறிவித்து விட்டு, தேர்தல் நாள் அறிவிக்கப்பட்ட பிறகு அதன் அடிப்படையில் மீதமுள்ள போட்டிகளின் தேதிகளை பிசிசிஐ அறிவிக்க உள்ளதாகவும் தெரிகிறது.

முன்னதாக, 17 வது ஐபிஎல் சீசனின் முதல் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகி இருந்தது. அதன்படி, தற்போது வெளியான அட்டவணையில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி ஆகிய அணிகள் மார்ச் 22 அன்று முதல் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளது. இப்படி ஏப்ரல் 7 வரை மொத்தம் 21 போட்டிகளுக்கான நாட்கள் மற்றும் மைதானங்கள் விவரமும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.

சென்னை அணி இதன் பின்னர் குஜராத், டெல்லி மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகளை முறையே மார்ச் 26, மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 5 ஆகிய தேதிகளில் சந்திக்கின்றது. இதில், குஜராத்துடன் சென்னை அணி மோதும் போட்டி, சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
IPL 2024 21 MATCHES SCHEDULE

சற்று முன்