- Advertisement -
Homeவிளையாட்டு18 தனக்கு ராசியான நம்பர் என்பதை மீண்டும் நிரூபித்த கோலி. இதே தேதியில் இதற்கு முன்...

18 தனக்கு ராசியான நம்பர் என்பதை மீண்டும் நிரூபித்த கோலி. இதே தேதியில் இதற்கு முன் அவர் செய்த சில தரமான சம்பவங்கள் ஒரு பார்வை

- Advertisement-

ஐபிஎல் தொடரின் இறுதி லீக் போட்டிகள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் நகம்கடிக்கும் அளவுக்கு பதற்றமாக சென்று கொண்டிருக்கின்றன. ஏனென்றால் ஒவ்வொரு போட்டியின் முடிவும் ஒன்றுக்கும் மேற்பட்ட அணிகளை பாதிக்கின்றன. இந்நிலையில்தான் நேற்று சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக நடந்த போட்டியை அபாரமாக விளையாடி வென்றுள்ளது பெங்களூர் அணி.

SRH அணி நிர்ணயித்த 187 ரன்கள் என்ற இலக்கை அபாரமாக விளையாடி சேஸ் செய்துள்ளது RCB. இதன் மூலம் SRH வீரர் ஹெண்ட்ரிச் கிளாசன் நேற்று அடித்த ஒரு சதம் வீணாய் போனது என்றே கூறலாம். ஆர்.சி.பி அணியை பொறுத்தவரை கோலி மற்றும் டு பிளசிஸ்சின் அபாரமான ஆட்டமே அவர்ளுக்கு வெற்றியை தேடி தந்தது என்று கூறலாம்.

பொதுவாக 18 என்பது தன் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு எண் என்று கோலியே சமீபத்தில் கூறி இருந்தார். அதை மெய்ப்பிக்கும் வகையில் தான் நேற்றைய போட்டியும் அவருக்கு அமைந்தது. இதற்க்கு முன்பும் அவர் இதே 18ஆம் தேதியில் தனது அணிக்காக சில சிறப்பான சம்பவங்களை நிகழ்த்தியுள்ளார்.

இதே தேதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிராக 50 பந்துகளில் 113 ரன்கள் சேர்த்து சதமடித்து அசத்தியுள்ளார் கோலி. ஐபிஎல் போட்டிகள் மட்டும் இல்லாமல் சர்வதேச கிரிக்கெட்டில் கூட கோலிக்கு 18 ராசியான நம்பராக அமைந்துள்ளது. 2013 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி தொடங்கிய டெஸ்ட் போட்டியில் கோலி 119 ரன்கள் சேர்த்துள்ளார்.

- Advertisement-

இதையும் படிக்கலாமே: ரசிகர்கள் கோலியை கொண்டடுறதுல தப்பே இல்ல.. ஐ. பி.எல்-ஐ தாண்டி மனுஷன் டெஸ்ட் கிரிக்கெட் வரை எதெல்லாம் யோசிக்கராரு. சான்ஸே இல்ல

இதே போல 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி தொடங்கிய இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டிலும் கோலி இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்.  இந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளால் இனிமேல் 18 ஆம் தேதியில் ஏதாவது போட்டிகள் இருந்தால் அதில் கோலியின் இன்னிங்ஸ் கூர்ந்து கவனிக்கப்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்றே கூறலாம்.

சற்று முன்