- Advertisement 3-
Homeவிளையாட்டுசிஎஸ்கே மட்டும் பிளே ஆப் போனா.. ஆறு வருஷம் கழிச்சு ஐபிஎல் தொடரில் நடக்க போகும்...

சிஎஸ்கே மட்டும் பிளே ஆப் போனா.. ஆறு வருஷம் கழிச்சு ஐபிஎல் தொடரில் நடக்க போகும் சூப்பரான சம்பவம்..

- Advertisement 1-

பல பரபரப்பான போட்டிகளுக்கு மத்தியில் தற்போது ஐபிஎல் தொடரின் லீக் சுற்று போட்டிகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இன்னும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதில் ஒரே ஒரு இடம் தான் பாக்கி உள்ளது. 13 போட்டிகள் ஆடி முடித்துள்ள கொல்கத்தா நைட்ரஸ் அணி ஒன்பது போட்டிகளில் வெற்றி பெற்று முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டிருந்தது.

இவர்களைத் தொடர்ந்து ராஜஸ்தான் அணியும், பின்னர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி குஜராத்துக்கு எதிரான நடைபெற இருந்த போட்டியில் மழையின் காரணமாக நடைபெறாமல் போனதால் ஒரு புள்ளிகளை பெற்று அவர்களும் தற்போது 15 புள்ளிகளுடன் பிளே ஆப்பிற்கு முன்னேற்றம் கண்டுவிட்டனர். இனி ஒரே ஒரு இடம் மட்டும் தான் பாக்கி இருக்கும் நிலையில் அந்த இடத்திற்காக ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணி கடுமையாக சண்டை போட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர்களை தவிர லக்னோ அணிக்கு சிறிய வாய்ப்பு இருந்தாலும் அவர்கள் தங்களின் கடைசி லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மிகப்பெரிய ரன் ரேட்டுடன் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்திலும் உள்ளனர். அதுவும் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றால் லக்னோ மற்றும் ஆர்சிபி உள்ளிட்ட அணிகள் நேரடியாக வெளியேறிவிடும். இதனால், ஆர்சிபி வெற்றி பெற்றால் கூட லக்னோ அணியின் ரன் ரேட் தான் பிரச்சனையாக இருக்கும் என தெரிகிறது.

இப்படி இன்னும் மீதம் இருக்கும் ஒரு சில போட்டிகளில் நிறைய திருப்புமுனைகள் காத்துக் கொண்டிருக்கும் சூழலில் தான் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே போதும் போட்டியை பெரிதாக எதிர்பார்த்து வரும் நிலையில் யார் வெற்றி பெறுவார்களோ அவர்கள் அசால்டாக நான்காவது அணியாக உள்ளே நுழைந்து விடுவார்கள்.

- Advertisement 2-

சென்னை மற்றும் ஆர்சிபி மோதும் போது அதன் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு இருக்கும் நிலையில் இரு அணியிலும் பலம் பொருந்திய வீரர்கள் பலர் உள்ளனர். இப்படி நடக்கும் போட்டிகளில் சிஎஸ்கே அணி தான் பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த சீசனில் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் வெற்றி பெற்று வீர நடை போட்டு வரும் ஆர்சிபியையும் குறைவாக எடை போட்டு விட முடியாது.

இப்படி பல சுவாரஸ்யமான சம்பவங்களுக்கு மத்தியில் சென்னை மற்றும் ஆர்சிபி அணிகள் மே 18ஆம் தேதி நடைபெறும் போட்டியில் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோத உள்ளது. இந்த நிலையில்தான் சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டால் ஐபிஎல் தொடரில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு நடக்க போகும் அற்புதம் பற்றி தான் தற்போது பார்க்கப் போகிறோம்

கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பிளே ஆப் சுற்றிற்கு முன்னேறி இருந்தது. இந்த சீசனிலும் சிஎஸ்கேவை தவிர மற்ற 3 அணிகளும் முன்னேறி உள்ளதையடுத்து சிஎஸ்கேவும் முன்னேறி விட்டால் அப்படியே 2018 ஆம் ஆண்டு நடந்த பிளே ஆப் சுற்று திரும்ப நடக்கும்.

அதே போல, 2018 ஆம் ஆண்டு இறுதி போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்