- Advertisement 3-
Homeவிளையாட்டுரோஹித்துக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் மேல என்ன வன்மமோ.. பிரபல வீரர்களுக்காக ஏங்கிய ரசிகர்கள்..

ரோஹித்துக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் மேல என்ன வன்மமோ.. பிரபல வீரர்களுக்காக ஏங்கிய ரசிகர்கள்..

- Advertisement 1-

இந்திய கிரிக்கெட் அணிக்கு இனி வரும் ஒவ்வொரு போட்டிகளும் மிக முக்கியமான போட்டிகளாகும். சூப்பர் 8 சுற்றில் தங்களின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை இந்தியா வீழ்த்தி இருந்தது. இன்னமும் பங்களாதேஷ் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக இரண்டு போட்டிகள் மீதம் இருக்கும் நிலையில் இவற்றில் ஒன்றில் வெற்றி பெற்று தோல்வி அடையும் போட்டியில் நல்ல ரன் ரேட்டுடன் விளங்கினாலே அரை இறுதி வாய்ப்பை சுலபமாக எட்டி விடலாம் என்றும் தெரிகிறது.

இந்திய அணியை பொறுத்தவரையில் பேட்டிங்கில் உள்ள தவறுகளை கொஞ்சம் கவனம் செலுத்தி திருத்திக் கொண்டால் நிச்சயம் ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய சவாலை கொடுக்க முடியும். இந்திய அணி பந்துவீச்சை பொறுத்த வரையில் சிறப்பாக பங்காற்றி வந்தாலும் பேட்டிங்கில் தான் ஒட்டுமொத்த பிரச்சனையும் இருந்து வருகிறது. கோலி நான்கு போட்டிகளில் 29 ரன்கள் மட்டுமே அடித்துள்ள நிலையில் ரோஹித் சர்மா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா என அனைவருமே தடுமாற்றத்தை தான் தொடர்ந்து கண்டு வருகின்றனர்.

அதிலும் ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் எந்தவித தாக்கத்தையும் நடந்து முடிந்த நான்கு போட்டிகளில் மேற்கொள்ளவில்லை. இதனால் வெளியே அமர வைக்கப்பட்டுள்ள ஜெய்ஸ்வால் அல்லது சஞ்சு சாம்சன் அல்லது சாஹல் ஆகிய வீரர்களில் யாருக்காவது வாய்ப்பு கொடுக்கலாம் என்பதும் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

ஆனால் தொடர்ந்து இந்த வீரர்களுக்கான வாய்ப்பு கிடைக்காமலே இருந்து வரும் நிலையில், சுழற்பந்து வீச்சாளரான சாஹலும் டி20 போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்துள்ள இந்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் எடுத்த பந்துவீச்சாளராகவும் விளங்கி வரும் சாஹல், இந்திய டி20 உலக கோப்பை அணியில் இடம் பெற்றதும் நிச்சயம் வாய்ப்புகள் கிடைத்து பல போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருப்பார் என கருதப்பட்டது.

- Advertisement 2-

ஆனால் லீக் போட்டியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த குல்தீப் யாதவ் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் களமிறங்கி இருந்தார். ஜடேஜா ஃபார்மில் இல்லாத போதும் அவருக்கு பதிலாக சாஹலுக்கு வாய்ப்பு கொடுக்காமல் தொடர்ந்து அவரே ஆடி வருவதும் பெரிய அளவில் விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

இதனிடையே டி 20 உலக கோப்பை அணியில் தேர்வாகி ஒரு போட்டியில் கூட ஆடாத ஜெய்ஸ்வால், சாம்சன் மற்றும் சாஹல் என மூன்று பேருமே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இந்த சீசனில் ஆடி இருந்தவர்கள். மற்ற 12 வீரர்களும் ஒரு போட்டியிலாவது ஆடிவிட்ட நிலையில் இந்த மூன்று பேர் மட்டும் இதுவரை களமிறங்கவே இல்லை.

இதனால் ரோஹித் ஷர்மாவுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீது என்ன வன்மமோ என ரசிகர்கள் வேடிக்கையாகவும் குறிப்பிட்டு வருகின்றனர்.

சற்று முன்