ஜடேஜாவிற்கு அடுத்தடுத்து 3 முறை ஊக்கமருந்து சோதனை… பாண்டியாவிற்கு ஒரு முறை… வெளியான முக்கிய தகவல்

- Advertisement -

ஊக்கமருந்து பரிசோதனை என்பது உலகம் முழுக்க உள்ள விளையாட்டு வீரர்கள் பலருக்கும் நடத்தப்படும் சோதனையாக உள்ளது. இதன் மூலம் விளையாட்டு வீரர்கள் தங்களுடைய திறனை அதிகரித்துக்கொள்ள ஏதாவது ஊக்கமருந்து எடுத்துக்கொள்கிறார்களா என்று கண்டறியப்படும். ஒரு சில வீரர்கள் அது ஊக்கமருந்து என்று தெரியாமலே எடுத்துக்கொள்ளும் நிகழ்வும் அரங்கேறி உள்ளது.

சில நேரங்களில் பிரபல வீரர்கள் கூட ஊக்கமருந்து பரிசோதனையில் சிக்கிக்கொள்வது உண்டு. அப்படி சிக்கியவர்களில் ஒருவர் தான் பிரித்விஷா. தலைவலிக்காக அவர் எடுத்துக்கொண்ட மாத்திரையில் தடை செய்யப்பட்ட மருந்து இருந்தது கண்டறியப்பட்டு அவருக்கு 6 மாத காலம் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் 2023ஆம் ஆண்டு இதுவரை யாருக்கெல்லாம் ஊக்கமருந்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தை NADA வெளியிட்டுள்ளது. அதில் ரவீந்திர ஜடேஜாவிற்கு மட்டும் ஜனவரி மாதத்தில் இருந்து மே மாதம் வரை 3 முறை இந்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த வருடம் அதிகப்படியாக இந்த பரிசோதனை செய்யப்பட்டது ஜடேஜாவிற்கு தான்.

NADA வெளியிட்டுள்ள அறிக்கையின் படி மொத்தம் 55 கிரிக்கெட் வீரர்களுக்கு இந்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் ரோகித் சர்மா, கோலி போன்ற முன்னணி வீரர்களுக்கு எந்த பரிசோதனையும் செய்யப்படவில்லை. அதே போல OOC என்னும் யூரின் பரிசோதனை ஹர்திக் பாண்டியாவிற்கு செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் ஊக்கமருந்து பரிசோதனை அதிக எண்ணிக்கையிலான கிரிக்கெட் வீரர்களுக்கு செய்யப்பட்டுள்ளது. அதே போல 2021, 2022 ஆண்டில் அதிகப்படியான ஊக்கமருந்து சோதனை செய்யப்பட்டது ரோகித் ஷர்மாவிற்கு தான்.

வீராங்கனைகளை பொறுத்தவரை ஹர்மான்பிரீத் கவுர் மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகிய இருவருக்கும் தலா ஒருமுறை இந்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான சோதனைகள் ஐபிஎல் சமயத்தில் செய்யப்பட்டுள்ளது. ஜடேஜாவை பொறுத்தவரை பெப்ரவரி 19, மார்ச் 26, ஏப்ரல் 26 ஆகிய தேதிகளில் அவருக்கு பரிசோதனை நடைபெற்றுள்ளது.

- Advertisement -

சற்று முன்