- Advertisement 3-
Homeவிளையாட்டுஓய்வை அறிவித்த பின் அதை கேன்சல் செய்து களத்திற்கு வந்து தாறு மாறாக ஆடிய 5...

ஓய்வை அறிவித்த பின் அதை கேன்சல் செய்து களத்திற்கு வந்து தாறு மாறாக ஆடிய 5 வீரர்கள்

- Advertisement 1-

உலகக்கோப்பைத் தொடர் நெருங்கி வரும் சூழலில் இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ், ஓய்வில் இருந்து மீண்டும் விளையாட வந்திருக்கிறார். 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை இங்கிலாந்து வெல்ல காரணமாக இருந்த பென் ஸ்டோக்ஸ், வந்திருப்பதால், அந்நாட்டு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளன. அந்த வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வில் இருந்து மீண்டும் வந்து வீரர்களை பற்றி பார்ப்போம்.

அதில் முதல் ஆள் யாரென்றால் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி தான். 2006ஆம் ஆண்டே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ஷாகித் அப்ரிடி, மீண்டும் 2010ஆம் ஆண்டு கம்பேக் கொடுத்தார். அதும் வீரராக அல்லாமல் கேப்டனாகவே வந்துள்ளார். ஆனால் ஒரேயொரு டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக செயல்பட்ட அவர், பின் மீண்டும் ஓய்வை அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். அதேபோல் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு பின் ஓய்வை அறிவித்த அவர், மீண்டும் வந்து 2015 உலகக்கோப்பை வரை விளையாடி சென்றார்.

அதேபோல் ஜிம்பாப்வே அணியின் பிரண்டன் டெய்லர் இந்த வரிசையில் முக்கியமானவர். 2015ஆம் ஆண்டு ஓய்வை அறிவித்த அவர், மீண்டும் 2017ஆம் ஆண்டு கம்பேக் கொடுத்தார். அதன்பின் அவரின் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் தரம் இரண்டுமே வேற வெலலுக்கு சென்றது. கடினமான காலத்தில் ஜிம்பாப்வே அணியின் ஒளி விளக்காகவே இருந்தார் என்று சொல்லலாம்.

இந்தப் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் டுவைன் பிராவோ பெயரும் உள்ளது. 2018ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த பிராவோ, மீண்டும் 2020ல் கம்பேக் கொடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அயர்லாந்து டி20 தொடரில் விளையாடினார். இப்போதும் எதிர்வரும் டி20 உலகக்கோப்பையில் விளையாட தீவிரமாக இருக்கிறார்.

- Advertisement 2-

அதேபோல் இந்தப் பட்டியலில் அண்மையில் இணைந்தவர் மொயின் அலி. 2021ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து மொத்தமாக ஓய்வை அறிவித்த மொயின் அலி, பென் ஸ்டோக்ஸின் அழைப்பை ஏற்று ஆஷஸ் தொடரில் மட்டும் விளையாடினார். இதையடுத்து மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் மற்றொரு இங்கிலாந்து வீரரான பீட்டர்சனும் இந்தப் பட்டியலில் இருக்கிறார். 2011ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தவர் பீட்டர்சன். அதன்பின் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டதால், மீண்டும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதே ஆண்டில் கம்பேக் கொடுத்தார்.

சற்று முன்