கால்பந்து போட்டிகளைப் போல் ஐபிஎல் தொடரிலும் வீரர்களை ஒரு அணியில் இருந்து மற்றொரு அணிகளில் மாற்றிக் கொள்ளும் வகையில் அனுமதிகள் உள்ளன. இந்த நடைமுறையை வைத்து பல அணிகளும் தங்களுக்கு தேவைப்படும் வீரர்களை மற்ற அணிகளிடமிருந்து வாங்கி இருக்கிறார்கள். ஆனால் இவ்வாறு மற்ற அணிகள் கேட்கும் போது எங்களுக்கு விருப்பமில்லை என்று நிராகரிக்கும் சம்பவங்களும் ஐபிஎல் வரலாற்றில் நடைபெற்றிருக்கிறது. அப்படி சம்பவத்தை தான் இப்போது பார்க்கப்போகிறோம்.
ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு சீசன் தொடங்குவதற்கு முன்பு லக்னோ அணி கே.கே.ஆர் அணியில் இருந்து நிதிஷ் ரானாவை பெற்று கொள்ள விரும்பியது. எனினும் இதற்கு கே.கே.ஆர் அணி ஒப்புக்கொள்ளவில்லை. நல்ல வேலையாக ஸ்ரேயாஸ் இல்லாததால் நிதிஷ் ரானா தான் கே.கே.ஆர் அணியின் கேப்டன் ஆகவே செயல்பட்டார்.
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் பலம் வாய்ந்த அணியாக விளங்கும் மும்பை இந்தியன்ஸ் அணி 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை வென்ற பிறகு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் ரஷித் கானை கேட்டிருக்கிறது. ரஷீத் கானை போய் கேட்கிறார்களே என்று ஹைதராபாத் அணி இந்த கோரிக்கையை நிராகரித்து இருக்கிறது.
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான கோரிக்கை தான். 2022 ஆம் ஆண்டு சீசனுக்கு பிறகு ஜடேஜாவுக்கும் தோனிக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனால் சென்னை அணியில் இருந்து ஜடேஜா விலக இருப்பதாக கூறப்பட்டது. இதன் காரணமாக டெல்லி அணி தங்களிடமிருந்து அக்சர் பட்டேல், ஷர்துல் தாக்கூரை எடுத்துக்கொண்டு ஜடேஜாவை அனுப்புங்கள் என்று கூறியது. எனினும் இதனை சிஎஸ்கே மறுத்தது.
இதேபோன்று குஜராத் அணி ரஹ்மத்துல்லா குர்பாஸ் லோகி பெகுர்சனை கொல்கத்தா அணிக்கு அனுப்பியது. ஆனால் அந்த அணியின் ஸ்டார் வீரர்களான ராகுல் திவாட்டியா மற்றும் சாய் கிஷோரை மற்ற அணிகள் கேட்டதாகவும் ஆனால் குஜராத் அணி அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் சன்ரைசர்ஸ் அணி இருக்கிறது. சன்ரைசர்ஸ் அணியில் உள்ள அப்துல் சமாத் அதிரடியாக விளையாடக்கூடிய வீரர். எனினும் அவரை தங்களுக்கு வழங்குமாறு ராஜஸ்தான் அணி கேட்டிருக்கிறது. இதனை சன்ரைசர்ஸ் அணி நிராகரித்திருக்கிறது.