- Advertisement 3-
Homeவிளையாட்டு83 வயது.. முதுகில் ஆக்சிசன் சிலிண்டர்.. 621 ரன்கள், 11 கேட்ச்.. வயசானாலும் சிங்கம் போல்...

83 வயது.. முதுகில் ஆக்சிசன் சிலிண்டர்.. 621 ரன்கள், 11 கேட்ச்.. வயசானாலும் சிங்கம் போல் சீறி இளசுகளுக்கே டப் கொடுக்கும் வீரர்

- Advertisement 1-

வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் மருத்துவராக வரும் கிராஸி மோகனின் தந்தை காக்கா ராதாகிருஷ்ணன் கேரம் போர்ட் விளையாடுவதையே வாடிக்கையாக வைத்திருப்பார். மனிதர்களுடன் சேர்ந்து கேரம் போர்ட் விளையாட வேண்டும் என்பதே அவரின் ஆசையாக படத்தில் காட்டப்பட்டிருக்கும்.

உயிருக்கு போராடும் சூழலில் படுத்த படுக்கையாக கிடக்கும் காக்கா ராதாகிருஷ்ணன், கமல்ஹாசன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கேரம் போர்ட் ஆடுவதை பார்ப்பார். இதனால் படுக்கையில் இருந்து எழுந்து கேரம் போர்ட் ஆட வரும் காட்சி ரசிகர்களிடையே நெகிழ்ச்சியாக அமையும். உயிருக்கு போராடும் சூழலில் தனக்கு பிடித்த விளையாட்டை விளையாட வேண்டும் என்று காக்கா ராதாகிருஷ்ணன் தீவிரமாக இருப்பார்.

அதுபோன்ற ஒரு சம்பவம் கிரிக்கெட்டில் நிகழ்ந்துள்ளது. 83 வயதில் உயிருக்கே போராடி வரும் சூழலில், ஆக்சிஜன் சிலிண்டரை முதுகில் கட்டிக்கொண்டு முதியவர் ஒருவர் கிரிக்கெட் விளையாடிய சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 1967ஆம் ஆண்டு முதல், முதல்தர கிரிக்கெட்டை விளையாடி வருபவர் அலெக்ஸ் ஸ்டீல்.

இவர் அயர்லாந்தின் ஃபார்ஃபேர்ஷையர் கிளப் அணிக்காக விளையாடி வந்திருக்கிறார். அந்த கிளப்பில் முக்கிய வீரராக இருந்துள்ள அலெக்ஸ் ஸ்டீல், மொத்தமாக 14 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 2 அரைசதங்கள், 11 கேட்ச்கள் மற்றும் 2 ஸ்டம்பிங்கள் அடங்கும். இதுவரை இவர் அடித்த மொத்த ரன்கள் 621. அதில் ஒருபோட்டியில் 97 ரன்கள் அடித்துள்ளார்.

- Advertisement 2-

ஒருகட்டத்தில் உடலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஆக்சிஜன் சிலிண்டரின் உதவியில்லாமல் அலெக்ஸ் ஸ்டீலால் வாழவே முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் கிரிக்கெட் விளையாடுவதற்காக அலெக்ஸ் ஸ்டீல், ஆக்சிஜன் சிலிண்டரை முதுகில் கட்டிக்கொண்டு விளையாட தொடங்கியுள்ளார். 30 வயதாகும் இளைஞர்கள் பலரும் ஓய்வை விரும்பி வருகிறார்கள்.

ஆனால் 83 வயதிலும் தனக்கு பிடித்த கிரிக்கெட் விளையாட்டை விளையாட ஆக்சிஜன் சிலிண்டருடன் களமிறங்கி இருக்கிறார் அலெக்ஸ் ஸ்டீல். அவரின் முதுகில் இருக்கும் ஆக்சிஜனை விடவும், அவரின் ஆக்சிஜன் கிரிக்கெட் தான் என்பதை இந்த வீடியோவில் மூலமாக அறிய முடிகிறது. அதேபோல் இவரை போன்று ஒரு விளையாட்டை வாழ்நாள் முழுவதும் கொண்டாடி விளையாட வேண்டும் என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

சற்று முன்