ஆகாஷ் மத்வாலின் பந்து வீச்சால் அவருக்கு இதில் தடை விதிக்கப்பட்டது. மும்பை போட்டியை நாங்கள் ஆவலாக பார்த்தோம். ரகசியம் பகிர்ந்த ஆகாஷின் நண்பர்

- Advertisement -

இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கான சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒருவராக அமைந்துள்ளார் ஆகாஷ் மத்வால். லக்னோ அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் தனது வேகப்பந்து வீச்சில் 5 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் அவர் ஐபிஎல் போட்டிகளில் அனில் கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்துள்ளார்.

மே 24 புதன்கிழமை அன்று, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிராக எலிமினேட்டரில் விளையாடிய மத்வால், 3.3 ஓவர்கள் மட்டுமே வீசி 5 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்கள் வீழ்த்தி அந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதைப்  பெற்றார். இதன் மூலம் ப்ளே ஆஃப் போட்டிகளில் 5 விக்கெட்களை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். எனினும் குஜராத் அணிக்கு எதிராக அவரது பௌலிங் பெரிதாக எடுபடவில்லை என்றே கூறவேண்டும்.

- Advertisement -

அடிப்படையில் பொறியாளரான மத்வால் மிக தாமதமாகதான் தன்னுடைய கேரியரை கிரிக்கெட்டுக்கு மாற்றியுள்ளார்.  2018 வரை, மத்வால் ஒரு டென்னிஸ் பந்து வீச்சாளராக இருந்திருக்கிறார். அவர் தனது சொந்த ஊரான ரூர்க்கிக்கு அருகிலுள்ள உள்ளூர் டென்னிஸ் லீக் போட்டிகளில் விளையாடி கலக்கியுள்ளார். அதன் பிறகு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்கு வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக வந்து பின்னர் மும்பை அணிக்காக ஆட தொடங்கினார்.

ஆகாஷின் தொடக்கக் காலம் பற்றி பேசியுள்ள அவரின் உள்ளூர் நண்பர் “அவர் இன்ஜினியரிங் முடித்து வேலை செய்து கொண்டிருந்த போது, ​​தினமும் பலர் வந்து, எங்கள் அணியில் விளையாட வாருங்கள், நாங்கள் பணம் தருகிறோம் என்று சொல்வார்கள். உத்தரகாண்டில் நடந்த இந்த போட்டிகளுக்குப் பிறகுதான் அவர் டென்னிஸ் பந்திலிருந்து கிரிக்கெட் பந்துக்கு மாறினார்.”

- Advertisement -

அவருடைய பந்துவீச்சுக்கு மிகுந்த பயம் இருந்ததால் பெரும்பாலும் யாரும் அவரை இங்கு விளையாட அனுமதிக்கவில்லை. அவரின் அபார பந்து வீச்சால் உள்ளூர் போட்டிகளில் விளையாட அவருக்கு தடை விதிக்கப்பட்டது. அதனால் அவர் வெளியில் சென்று விளையாட ஆரமித்தார்.

இதையும் படிக்கலாமே: எங்க டீம்ல ஒருத்தர் கூட அந்த மாதரி ஆடல. சுப்மன் கில்லோட ஆட்டம் வேற லெவல்ல இருக்கு. அது அப்படியே தொடரும்னு எதிர்பாக்கறேன். ரோகித் சர்மா பேட்டி

லக்னோவிற்கு எதிரான போட்டியின் போது கிட்டத்தட்ட 40 பேர் அவருடைய வீட்டில் கிரிக்கெட் பார்த்தோம். மழைக்காலங்களில் எங்கள் பகுதியில் மின் தடை அதிகம் ஏற்படும் என்பதால், ஜெனரேட்டர் எல்லாம் ஏற்பாடு செய்திருந்தோம் என தனது நண்பை பற்றி பூரிப்போடு கூறினார் ஆகாஷின் நண்பர் ஆஷிஷ்.

- Advertisement -

சற்று முன்