- Advertisement -
Homeவிளையாட்டுமேட்ச் தோத்தத விடுங்க.. அப்படி பண்றதுக்கு கூடவா இந்தியா டீம்ல ஒருத்தர் இல்ல.. கடுப்பான ஆகாஷ்...

மேட்ச் தோத்தத விடுங்க.. அப்படி பண்றதுக்கு கூடவா இந்தியா டீம்ல ஒருத்தர் இல்ல.. கடுப்பான ஆகாஷ் சோப்ரா..

- Advertisement-

இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடருக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வரும் சூழலில், இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்து விட்டது. இதில் இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டியில் பேட்டிங் பலவீனம் உள்ளிட்ட சில காரணங்களால் தோல்வியடைந்திருந்தது.

இந்திய அணி முதல் டெஸ்டில் வெற்றி பெற்றிருந்தாலும் அதில் அவர்களின் பந்துவீச்சு தான் மிகப்பெரிய பங்கு வகித்திருந்தது. பேட்டிங்கை பொருத்த வரையில் மிக சொதப்பலான ஆட்டத்தை முதல் இன்னிங்சில் வெளிப்படுத்தியிருந்த இந்திய அணி 150 ரன்களில் ஆல் அவுட்டாகி இருந்தது. ஆனால் பந்து வீச்சில் பட்டையை கிளப்பிய இந்திய அணி, முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங்கிலும் சிறப்பாக ஆடி ரன் சேர்த்து அதனை வெற்றியாக மாற்றி இருந்தது.

ஆனால், 2 வது டெஸ்டில் முழுக்க முழுக்க பேட்டிங்கில் தோல்வி அடைந்த இந்திய அணி, இரண்டு இன்னிங்ஸ்களில் ஒரு முறை கூட 200 ரன்களை கிடைக்கவில்லை. கோலி, ரோஹித், பந்த் உள்ளிட்ட பலரும் இக்கட்டான நேரத்தில் ரன் சேர்க்கத் தவறியது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதனிடையே இந்திய அணியின் தோல்விக்கான காரணம் பற்றி ஆகாஷ் சோப்ரா சில காரணங்களை பகிர்ந்துள்ளார்.

“இரண்டாவது டெஸ்டில் இந்திய அணிக்கு எங்கே தவறாக போனது?. அது ஒரு மிகப்பெரிய கேள்வி. உண்மை என்னவென்றால் பேட்டிங்கில் தோல்வி அடைந்தது தான். அதுவும் ஒரு முறை கிடையாது, இரண்டு இன்னிங்ஸிலும் இந்திய அணி அதில் தோல்வி அடைந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது நிச்சயம் சிறப்பான முடிவு. அப்படி ஆடி 180 ரன்களில் நீங்கள் ஆல் அவுட்டான போது முதல் இன்னிங்சில் நடப்பது சகஜம் என கூறலாம்.

- Advertisement-

ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் பிட்ச் மிகவும் ஃபிளாட்டாக தொடங்கி விட்டது. இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 80 ஓவர்களை ஒரு டெஸ்டில் ஆட முடியவில்லை என்றால் அதுதான் பிரச்சனை. அணியில் ஒரு வீரர் கூட 80 முதல் 100 பந்துகள் பேட்டிங் செய்யவில்லை. நாம் ஒரு வீரர் 50 ரன்கள் அடிக்கவில்லை என்று பேசுகிறோம். ஆனால் எந்த வீரரும் 50 பந்துகளை கூட ஆடவில்லை. இந்த பிட்ச்சில் 50 பந்துகளை கூட தாக்குபிடிக்க முடியாது எனக்கூற முடியாது. நீங்கள் ஒரு செசனிலாவது விக்கெட்டுகளை இழக்காமல் விளையாடி இருக்க வேண்டும்.

அதே போல இந்தியாவின் பேட்டிங்கின் மோசமான ஃபார்ம் மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டது. ரிஷப் பந்த் மிடில் ஆர்டரில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் இருக்க, இந்த தொடரில் இதுவரை சிறப்பாக ஆடவில்லை. ரோஹித் ஷர்மா ஆறாவது இடத்தில் வந்ததும் நல்ல ஆலோசனையாக இல்லை. நமது பேட்டிங் அப்படியே மோசமானது தான் அடிலெய்டு மைதானத்தில் இந்தியா தோல்வியடைய முக்கிய காரணம்” என ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.

சற்று முன்