- Advertisement -
Homeவிளையாட்டுரோஹித் என்ன தோனியா.. மும்பையில அவர் கதை முடிஞ்சது.. அந்த பையனை மட்டும் தான் விடமாட்டாங்க.....

ரோஹித் என்ன தோனியா.. மும்பையில அவர் கதை முடிஞ்சது.. அந்த பையனை மட்டும் தான் விடமாட்டாங்க.. கணித்த ஆகாஷ் சோப்ரா..

- Advertisement-

இந்திய அணிக்கு அடுத்தடுத்து நிறைய முக்கியமான சர்வதேச போட்டிகள் வந்து கொண்டே இருக்கும் அதே வேளையில் இன்னொரு பக்கம் ஐபிஎல் பற்றிய செய்திகளும் அதிகம் கவனத்தை பெற்று வருகிறது. இதற்கு முக்கிய காரணம் இந்த ஆண்டு இறுதிக்குள் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ளது தான். இந்த ஏலத்தின் முடிவில் நிச்சயம் பத்து அணிகளிலும் நிறைய மாற்றங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் வீரர்களை தக்க வைத்துக் கொள்வதற்கான பட்டியல் பற்றி எந்த அறிவிப்பையும் பிசிசிஐ வெளியிடாமல் இருக்கும் போது கிரிக்கெட் வட்டாரத்தில் நிறைய விஷயங்கள் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதில் முக்கியமான ஒரு விஷயம் தான் ரோஹித் ஷர்மா மும்பை அணியில் இடம் பிடிப்பாரா மாட்டாரா என்பது.

கடந்த ஆண்டு மும்பை அணியில் இருந்த போதிலும் அவரை கேப்டன் பதவியில் இருந்து மாற்றி விட்டு ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்திருந்தனர். இந்திய அணியின் கேப்டனாக இருந்த போதும் ரோஹித்தை ஒதுக்கிவிட்டு புதிய வீரரை கேப்டனாக மாற்றியது அவரது ரசிகர்களை கொந்தளிக்க வைத்தது.

இதனால் ஐபிஎல் தொடர் நடைபெற்று வந்த சமயத்திலேயே ரோஹித் அடுத்த சீசனில் மும்பை அணியில் ஆட வேண்டாம் என பலரும் எச்சரிக்க தொடங்கிவிட்டனர். அது மட்டுமில்லாமல் குறைந்த வீரர்களை தக்க வைத்துக்கொள்ள பிசிசிஐ அறிவித்தால் நிச்சயம் மற்ற இளம் வீரர்களுக்கே மும்பை அணி முன்னுரிமை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement-

அப்படி இருக்கையில் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா, ரோஹித் ஷ்ர்மா மும்பையில் ஆடுவாரா இல்லையா என்பது பற்றி தனது தனிப்பட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளார். “ரோஹித் ஷ்ர்மா மும்பை அணியில் நீடிப்பார மாட்டாரா என்பது தான் தற்போது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. ஆனால் நான் அவர் தொடர்ந்து ஆடமாட்டார் என்று நினைக்கிறேன்.

அப்படி ரோஹித் ஷர்மாவை மும்பை அணியும் தக்க வைத்துக் கொண்டால் அடுத்த மூன்று ஆண்டுகள் அவர் ஆட வேண்டும் என்பதனால் அவரை நீக்குவதற்கான வேலைகளில் தான் இறங்கும். தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள ரோஹித் ஷர்மா என்ன தோனியா. சிஎஸ்கே மற்றும் தோனி ஆகியோரின் கதை வித்தியாசமானது.

ஆனால் ரோஹித் ஷர்மா மும்பையில் இருப்பதை விட அவர் அணியில் இருந்து விலக வேண்டும். அல்லது மும்பை அணி அவரை விடுவிக்க வேண்டும். ஒருவேளை டிரேடிங் முறையில் வேறு அணியில் ரோஹித் ஆடலாம். இல்லை என்றால் மெகா ஏலத்தில் ரோஹித் இடம் பெறலாம்.

மும்பையில் அவரது பயணம் முடிந்து விட்டதாகவே நான் கருதுகிறேன். ஆனால் அதே வேளையில் மும்பை அணி நிச்சயம் சூர்யகுமார் யாதவை விடுவிக்காது. சூர்யகுமாரும் மும்பை அணியை விட்டு விலகி வேறு அணிக்கு ஆட வேண்டுமென நினைக்க மாட்டார்” என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

சற்று முன்