- Advertisement -
Homeவிளையாட்டுநீங்க செஞ்சது மிகப்பெரிய துரோகம்.. அதை யாரும் மறந்துட மாட்டாங்க.. இனி பெரிய தொகை சந்தேகம்...

நீங்க செஞ்சது மிகப்பெரிய துரோகம்.. அதை யாரும் மறந்துட மாட்டாங்க.. இனி பெரிய தொகை சந்தேகம் தான்.. ஆஸி வீரர் குறித்து ஆகாஷ் சோப்ரா காட்டம்

- Advertisement-

ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க், 2015க்கு பிறகு ஐபிஎல்லில் விளையாடவில்லை. பெங்களூரு அணிக்காக 2014, 2015 என இரண்டு சீசன்களில் அட்டாகசமாக செயல்பட்டார். 24 போட்டிகளில் விளையாடி 34 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ஐபிஎல்-ஐ விட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு விளையாடுவதே முக்கியம் என 8 ஆண்டுகளாக ஐபிஎல்லில் விளையாடமால் இருந்துவந்தார். ரசிகர்களும் இவர் ஐபிஎல்லில் ரீஎன்ட்ரி தர மாட்டாரா என ஏங்கினர். இந்த நிலையில், அடுத்த ஐபிஎல் சீசனில் தான் பங்கேற்க இருப்பதாக மிட்சல் ஸ்டார்க் கூறியிருந்தார். அடுத்தாண்டு டி20 உலகக்கோப்பைக்கு தாயாராக ஐபிஎல் சிறந்த தொடராக இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.

இதனால், பல அணிகள் இவரை போட்டிபோட்டு ஏலத்தில் பெரிய தொகைக்கு எடுக்கும் என ரசிகர்கள் இப்போதே நம்பிக்கையில் உள்ளனர். இந்நிலையில், ஸ்டார்க் செய்த துரோகத்தை எந்த அணியும் அவ்வளவு எளிதாக மறக்கமாட்டார்கள் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ஓபனாக பேசியுள்ளார்.

இது குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய அவர், 2015க்கு பிறகு அவர் ஐபிஎல்லில் விளையாடவில்லை. அவரை யாராவது வாங்குவார்களா? உங்களது பிரச்சனை என்ன தெரியுமா? உங்களது பெயரை ஏலத்தில் பலமுறை கொடுத்துவிட்டு பின் தொடரிலிருந்து விலகுவதுதான். ஒரு அணி உங்களை நம்பி ஏலத்தில் எடுத்த பிறகு தொடர் நெருங்கும் சமயத்தில் விலகுவது என்பது துரோகம் தவிர வேறு என்ன. நீங்கள் செய்த இந்த துரோகத்தை எந்த அணியும் அவ்வளவு எளிதில் மறந்துவிடாது என்றார்.

- Advertisement-

மேலும் சில வெளிநாட்டு வீரர்கள் தாங்கள் ஏலத்தில் நல்ல விலைக்கு போகவில்லை என்றால் ஐபிஎல்லில் இருந்து விலகியதையும் ஆகாஷ் சோப்ரா சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து விவரத்த அவர், ஏலத்தில் நல்ல தொகை கிடைக்கவில்லை எனில் அவர்கள் தொடரிலிருந்து விலகுவார்கள். இதை அதிகாரப்பூர்வமாக யாரும் கூறவில்லை என்றாலும் இது நாம் அனைவருக்கும் தெரியும்.

அது இங்கிலாந்து வீரராக இருந்தாலும் சரி, ஆஸ்திரேலிய வீரராக இருந்தாலும் சரி. அவர்கள் செய்ததை எந்த அணிகளும் மறக்காது. நினைவில் வைத்துக்கொள்ளும். ஒருவேலை ஸ்டார்க் வாக்குறுதி கொடுத்ததுபோல ஐபிஎல்லில் விளையாடினாலும், அவரை பெரிய தொகைக்கு ஏலம் எடுப்பார்களா என்பது சந்தேகம். எனவே ஒரு நல்ல பேக்கப் பிளேனோடு அவரை ஏலத்தில் எடுக்க வேண்டும் என்றார்.

2018ல் கொல்காத்தா நைட் ரைடர்ஸ் அணி மிட்சல் ஸ்டார்க்கை 9.4 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது. ஆனால் அவர் அந்த சீசனில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த சீசனில் ஸ்டார்க் விளையாடுவாரா மாட்டாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சற்று முன்