- Advertisement -
Homeவிளையாட்டுஆறு மாசத்துக்குள்ள அப்பாவும், சகோதரரும் தவறிட்டாங்க.. இந்திய அணியில் தேர்வான இளம் வீரரின் சோக பின்னணி..

ஆறு மாசத்துக்குள்ள அப்பாவும், சகோதரரும் தவறிட்டாங்க.. இந்திய அணியில் தேர்வான இளம் வீரரின் சோக பின்னணி..

- Advertisement-

கடந்த சில தினங்களுக்கு முன்பாக இங்கிலாந்து அணிக்கு எதிராக மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், எதிர்பார்த்த சில வீரர்கள் இடம்பெறாமல் போக, எதிர்பாராத வீரர்கள் பெயரும் இந்த லிஸ்டில் இடம்பிடித்திருந்தது. தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி தொடரில் சிறப்பாக ஆடி வரும் புஜாராவிற்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது, ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருந்தது.

இதே போல, குடும்ப சூழ்நிலையின் காரணமாக முதல் இரண்டு டெஸ்டில் இருந்து தாமாக விலகிய விராட் கோலி, இந்த 3 போட்டிகளிலும் ஆடவில்லை. 2 வது டெஸ்டில் காயம் காரணமாக விலகி இருந்த ஜடேஜா மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் தற்போது அணியில் இடம்பிடித்துள்ள சூழலில், அவர்களின் உடற்தகுதியின் அடிப்படையில் அவர்கள் ஆடும் லெவனில் தேர்வாகலாம் என கூறப்பட்டிருந்த நிலையில், 3 வது டெஸ்டில் மட்டும் தற்போது கே எல் ராகுல் விலகி உள்ளார்.

இது தவிர முதல் 2 டெஸ்ட்களில் சிறப்பாக ஆட தவறிய ஷ்ரேயாஸ் ஐயர், எஞ்சிய போட்டிகளில் நீக்கப்பட்டுள்ளார். இதுவும் பலர் மத்தியில் பேசு பொருளாக மாறி உள்ளது. இளம் வீரர்கள் அதிகம் அடங்கியுள்ள இந்திய அணியில், வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் தேர்வாகி உள்ளார். இவர் முதல் தர போட்டிகளில் பந்து வீசி வந்த சூழலில், ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காகவும் கடந்த சில சீசன்களாக ஆடி வருகிறார்.

பும்ரா, சிராஜ் உள்ளிட்ட சீனியர் பந்து வீச்சாளர்கள் அதிகம் இருப்பதால் ஆகாஷிற்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது இன்னொரு பக்கம் இருந்தாலும் அவர் இந்த வாய்ப்பை பிடிப்பதற்கு முன் பட்ட கஷ்டங்கள், பலரையும் மனமுடைய வைத்துள்ளது.

- Advertisement-

இது பற்றி சமீபத்தில் பேசி இருந்த இளம் வீரர் ஆகாஷ் தீப், “நான் இருக்கும் பீகார் மாநிலத்தில் இருந்து கிரிக்கெட்டில் சாதிக்க நினைப்பதே பெரிது. என் அப்பா நான் போலீசாக வேண்டும் என்றோ அல்லது ஒரு அரசு வேலையில் பணிபுரிய வேண்டும் என்றோ விரும்பினார். நானும் கிரிக்கெட்டை ஒதுக்கி வைத்து விட்டு தேர்வுகள் எழுதி வந்தேன்.

ஆனால், ஆறு மாத இடைவெளியில் எனது தந்தையும், சகோதரரும் உயிரிழந்தனர். என்னிடம் இழப்பதற்கும் அப்போது ஒன்றுமில்லை. என் குடும்பத்தை பார்த்துக் கொள்வது மட்டும் என் கடமையாக இருந்தது. அப்போது மதத்திற்கு ஒரு நான்கைந்து நாள் டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிகளில் ஆட போய் ஒரு நாளைக்கு 6,000 ரூபாய் வரை சம்பாதித்தேன்.

ஒரு மாதத்திற்கு 20,000 ரூபாய் வரை கிடைத்ததால் எனது செலவுகளை பார்த்துக் கொள்ளவும் சரியாக இருந்தது. எனக்கு தனியாக பயிற்சி கொடுக்க எந்த பயிற்சியாளரும் இல்லை. அருண் லால், ரானோ, சவுராசிஸ் லாஹிரி உள்ளிட்டோரின் உதவியால் தான் நான் பல விஷயங்களை கற்றுள்ளேன்” என ஆகாஷ் தீப் உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி ஒரு மனம் உடைக்கும் பின்னணியில் இருந்து வந்த ஆகாஷ் தீப், தனது திறனால் சர்வதேச அரங்கில் பெரிய வீரராக வர வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

சற்று முன்