Homeகிரிக்கெட்பிரபல இந்திய வீரருக்கு டிவில்லியர்ஸ் விடுத்த அழைப்பு.. இது மட்டும் நடந்தா கன்ஃபார்ம் சரவெடி தான்..

பிரபல இந்திய வீரருக்கு டிவில்லியர்ஸ் விடுத்த அழைப்பு.. இது மட்டும் நடந்தா கன்ஃபார்ம் சரவெடி தான்..

-Advertisement-

இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருவது போல, மற்ற பல நாடுகளிலும் டி 20 லீக் தொடர்கள் நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து நாடுகளில் இருந்தும் ஏராளமான வீரர்கள் கலந்து சிறப்பான பங்களிப்பையும் அளித்து வருகின்றனர். பாகிஸ்தான் சூப்பர் லீக், லங்கன் பிரீமியர் லீக், SA 20 லீக் என பல தொடர்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

ஐபிஎல் போட்டிகள் எந்த அளவுக்கு இந்திய இளம் வீரர்கள் வெளியே தெரியும் அளவுக்கு உதவி செய்ததோ, அதே போல ஒவ்வொரு லீக் தொடர்களும் திறமை படைத்த வீரர்களை வெளியே கொண்டு வரவும் உதவி செய்கிறது. அந்த வகையில், கடந்த ஜனவரி மாதம், தென்னாபிரிக்க நாட்டின் முதல் டி 20 லீக் தொடரான SA 20 நடந்து முடிந்திருந்தது.

-Advertisement-

ஐபிஎல் தொடரில் உள்ள அணிகளின் உரிமையாளர்கள், SA 20 தொடரிலும் சில அணிகளை வாங்கி இருந்தார்கள். மிகவும் விறுவிறுப்பாக சிறந்த வீரர்களை கொண்டு நடந்த இந்த லீக் தொடரின் இறுதி போட்டியில், பிரெட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி, சன் ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி கோப்பையை கைப்பற்றி இருந்தது.

முதல் லீக் தொடரே சிறப்பாக நடந்து முடிந்துள்ளதையடுத்து அடுத்த தொடரையும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து வருகின்றனர். இதனிடையே, தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஏபி டிவில்லியர்ஸ், தங்கள் நாட்டில் நடைபெறும் SA 20 தொடரில் ஒரு இந்திய வீரர் பங்கேற்பதை தான் பார்க்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.

-Advertisement-

இது தொடர்பாக பேசிய ஏபி டிவில்லியர்ஸ், “இந்திய அணி வீரர் விராட் கோலி ஒரு SA 20 தொடரிலாவது ஆடுவதை நான் காண விரும்புகிறேன். அவர் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை முடித்ததன் பின்னர், இங்கு வந்து SA 20 தொடர் ஆடுவார் என நான் நம்புகிறேன். அது மிகவும் அற்புதமாக இருக்கும்” என தெரிவித்துள்ளார். மேலும் தான் ஐபிஎல் தொடரில் அதிக ஆண்டுகள் ஆடிய ஆர்சிபி அணி குறித்து பேசிய டிவில்லியர்ஸ், “எனது இதயம் எப்போதும் ஆர்சிபியிடம் தான் உள்ளது. நான் நிறைய ஆண்டுகள் அந்த அணிக்காக ஆடியிருக்கிறேன். ஆர்சிபி ரசிகர்களுடனும் நல்ல கனெக்ஷன் உள்ளது. வருங்காலத்தில் என்னை ஆர்சிபி ஜெர்சியில் பார்க்க விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

ஆர்சிபியில் ஆடியதால் மூலம் கோலியின் சிறந்த நண்பராக மாறிய டிவில்லியர்ஸ், தொடர்ந்து கோலி குறித்து பல்வேறு நினைவுகளை பகிர்ந்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில், தற்போது அவர் SA 20 தொடரில் ஆடுவதைக் காண வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆர்சிபி ஜெர்சியில் தான் மீண்டும் வர வேண்டும் என டிவில்லியர்ஸ் விரும்பும் சூழலில் அணியின் பயிற்சியாளராக வேண்டும் என்பதை அவர் அப்படி குறிப்பிடுகிறார் என தெரிகிறது.

-Advertisement-

சற்று முன்