- Advertisement 3-
Homeவிளையாட்டுஇதுதான் தல தோனி.. எவ்வளவு ஆச்சரியம்.. எனக்கு என்னமோ இன்னும் 3 சீசன் ஆடுவாரோனு தோன்றுகிறது.....

இதுதான் தல தோனி.. எவ்வளவு ஆச்சரியம்.. எனக்கு என்னமோ இன்னும் 3 சீசன் ஆடுவாரோனு தோன்றுகிறது.. தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் கணிப்பு..

- Advertisement 1-

ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 19ம் தேதி துபாய் கோகோ கோலா வளாகத்தில் நடக்கவுள்ளது. இதனையொட்டி ஐபிஎல் தொடரின் அனைத்து அணிகளும் தக்க வைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன.அதில் சென்னை அணி தரப்பில் 8 வீரர்களை மொத்தமாக விடுவித்தது. பென் ஸ்டோக்ஸ், மகலா, ப்ரிடோரியல், பகத் வர்மா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் சென்னை அணியின் கேப்டன் தோனி சிஎஸ்கே அணியால் தக்க வைக்கப்பட்டுள்ளார். தோனி விளையாடுவாரா, மாட்டாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. ஏனென்றால் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு பின் அவரின் காலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் தோனி நீண்ட மாதங்களாக ஓய்வில் இருந்தார்.

அதன்பின் மீண்டும் ஜிம்மில் தோனி உடற்பயிற்சி செய்ய தொடங்கிய நிலையில், ஐபிஎல் தொடருக்கு தயாராகி வருவதாக யூகிக்கப்பட்டது. அதேபோல் கடந்த ஐபிஎல் தொடரே அவருக்கான கடைசி சீசனாக பார்க்கப்பட்ட நிலையில், ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு பின் இன்னொரு சீசன் விளையட முயற்சிப்பேன் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தோனி கடைசி முறையாக சிஎஸ்கே அணிக்காக களமிறங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

42 வயதில் தோனி ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக களமிறங்கவுள்ளது ரசிகர்கள் மட்டுமல்லாமல் முன்னாள் வீரர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் ஏபி டி வில்லியர்ஸ் பேசும் போது, தோனியின் பெயர் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் பார்த்த போது, மகிழ்ச்சியாக இருந்தது.

- Advertisement 2-

கடந்த சீசனில் தோனி விளையாடிய போதே, அதுதான் அவருக்கு கடைசி சீசன் என்று ரசிகர்கள், முன்னாள் வீரர்கள், விமர்சகர்கள் என்று பலரும் பேசினார்கள். ஆனால் அவர் மீண்டும் ஐபிஎல் சீசனில் விளையாட தயாராகியுள்ளார். தோனி முடிவுகள் எப்போதும் ஆச்சரியங்களை அளிக்க கூடியதுதான். இந்த முடிவும் அப்படிதான் எனக்கு உள்ளது. அதேபோல் தோனி இன்னும் 3 ஐபிஎல் சீசன்களை விளையாடினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

சிஎஸ்கே அணியின் தக்க வைக்கப்பட்ட வீரர்களைன் பெயர்களில் தோனி பெயர் இருந்த போது மகிழ்ச்சியடைந்தேன் என்று தெரிவித்துள்ளார். தோனிக்கு இதுவே கடைசி சீசன் என்பதால், ரசிகர்கள் மட்டுமல்லாமல் முன்னாள் வீரர்கள், தற்போதைய வீரர்கள் பலரும் ஐபிஎல் தொடரை காண ஆவலாக உள்ளனர்.

சற்று முன்