- Advertisement 3-
Homeவிளையாட்டுநேத்து மேட்ச்ல இவர் ஆடுன விதத்தை பார்த்தா 100% இல்ல 110% இந்திய அணி தான்...

நேத்து மேட்ச்ல இவர் ஆடுன விதத்தை பார்த்தா 100% இல்ல 110% இந்திய அணி தான் உலகக்கோப்பை ஜெயிக்கும் – முன்னாள் இந்தியன்ஸ் வீரர் பேச்சு

- Advertisement-

வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் அண்மையில் நடைபெற்று முடிந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை மூன்றுக்கு இரண்டு (3-2) என்ற கணக்கில் இழந்த இந்திய அணியானது அடுத்ததாக பும்ரா தலைமையில் தற்போது அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியானது நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் 33 ரன்கள் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

- Advertisements -

இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது இந்தியாவின் கேப்டன் பும்ரா வகுத்த வியூகங்கள் மிகச் சிறப்பாக அமைந்தது வெற்றிக்கு காரணமாகவும் இருந்தது. ஏனெனில் தற்போது கேப்டனாக மட்டுமின்றி பந்துவீச்சாளர்களின் தலைமை நபராகவும் செயல்பட்ட பும்ரா போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்ப தனது ஓவர்களை பிரித்து பிரித்து வீசினார்.

அதோடு அணியில் இருக்கும் வீரர்களையும் சுழற்சி முறையில் பந்து வீசவைத்து சரியான நேரத்தில் எதிரணியை அழுத்தத்திற்குள் கொண்டு வந்தார். அவரது இந்த சிறப்பான செயல்பாடு குறித்து பாராட்டி பேசியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரரான அபிஷேக் நாயர் கூறும்போது :

- Advertisement-

இந்திய கிரிக்கெட் நிர்வாகமும் ரசிகர்களும் பும்ராவின் பந்துவீச்சை பார்த்து மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். நேற்று அவர் விளையாடிய விதத்தை பார்க்கையில் எனக்கு இந்திய அணி ஒருநாள் கோப்பையை வென்று விடும் நம்பிக்கை 100%-த்தில் இருந்து 110 சதவீதமாக உயர்ந்ததாக நினைக்கிறேன்.

ஏனெனில் காயத்திற்கு பிறகு மீண்டு வந்த அவர் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீச்சை துவங்கினார். அதோடு முன்பை விட தற்போது ஆவலுடன் தனது பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். இப்படி தனக்கான திட்டங்களை சரியாக வகுத்து அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் அவர் நிச்சயம் உலக கோப்பையை தொடரிலும் சாதிப்பார் என அபிஷேக் நாயர் கூறியது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்