- Advertisement 3-
Homeவிளையாட்டுரோகித், கோலி எல்லாம் இப்போ வேண்டாம்... இளம் வீரர்களே அணியில இருக்கட்டும்.. முன்னாள் இந்திய வீரர்...

ரோகித், கோலி எல்லாம் இப்போ வேண்டாம்… இளம் வீரர்களே அணியில இருக்கட்டும்.. முன்னாள் இந்திய வீரர் பேச்சு

- Advertisement-

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கேஎல் ராகுல் கேப்டனாக செயல்பட்டார்.

இதன்பின் 2வது போட்டியின் போது பும்ராவுக்கும், 3வது போட்டியில் இருந்து சுப்மன் கில் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோருக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி ஏற்கனவே 2-0 என்று கைப்பற்றியுள்ள நிலையில், கடைசி ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நடக்கவுள்ளது. இந்தப் போட்டிக்கு இந்திய அணியின் சீனியர் வீரர்கள் அனைவரும் கம்பேக் கொடுக்கவுள்ளனர்.

- Advertisements -

கடந்த இரு போட்டிகளில் இந்திய அணியின் செயல்பாடுகள் வேற லெவலில் இருந்தது. தொடக்க வீரராக வந்த சுப்மன் கில், மிடில் ஆர்டரில் சொதப்பிய ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சதம் விளாசி அசத்தினர். அதேபோல் 19 மாதங்களாக ஃபார்மின்றி தவித்த சூர்யகுமார் யாதவ் அடுத்தடுத்து 2 அரைசதங்களை மிரட்டலாக அடித்து ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.

அதேபோல் அக்சர் படேலுக்கு மாற்று வீரராக வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் சுழலில் மேஜிக் நிகழ்த்தியுள்ளார். இன்னொரு பக்கம் ஜடேஜா மீண்டும் மிடாஸ் டச்சை கொண்டு வந்துள்ளார். முகமது ஷமி, பிரசித் கிருஷ்ணா என்று அனைவரும் உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக அதிரடி ஃபார்முக்கு திரும்பியுள்ளனர்.

- Advertisement-

இந்த நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா, குல்தீ, ஹர்திக் ஆகியோர் திரும்பவுள்ளதால், எந்த வீரர் இந்திய அணியில் இருந்து அடுத்தப் போட்டியில் நீக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் கடைசி போட்டியில் விளையாட தேவையில்லை என்று முன்னாள் வீரர் அபிஷேக் நாயர் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் பேசும் போது, கடைசி ஒருநாள் போட்டியில் சில வீரர்களுக்கு இடமிருக்காது. நட்சத்திர வீரர்கள் அணிக்கு திரும்பும் போது எந்த வீரர் தனது இடத்தை தக்க வைக்கிறார் என்பது சுவாரஸ்யமாக இருக்கப் போகிறது. ஆனால் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரி முடிவில் தான் அணித் தேர்வு இருக்கப் போகிறது.

ஏனென்றால் 2 போட்டிகளிலும் சிறப்பாக ஆடிய இளம் வீரர்களுக்கு, கடைசி போட்டியிலும் ஆட வைக்கலாம். இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி இருப்பதால், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் கடைசி போட்டியிலும் விலகலாம் என்று நினைக்கிறேன். அதன்பின்னர் உலகக்கோப்பை தொடருக்கு முன் சரியான பிளேயிங் லெவனை தேர்வு செய்து கொள்ளலாம். இதனால் கடைசி போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

சற்று முன்