இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீரின் வருகை, ரோஹித் ஷர்மா, ரவீந்திர ஜடேஜா மற்றும் விராட் கோலி உள்ளிட்டோர் டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற விஷயங்கள் இனிவரும் டி20 போட்டிகளில் இந்திய இளம் வீரர்களுக்கு மிகப்பெரிய ஒரு வாய்ப்பாக அமையப்போகிறது என்றே சொல்லலாம்.
பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறந்து விளங்குபவர்கள் வயது குறைவான வீரராக இருந்தாலும் நிச்சயம் கம்பீர அவர்களுக்கு நல்ல ஒரு அங்கீகாரத்தை கொடுத்து சிறந்த வீரராக மாற்றுவதற்கான முயற்சிகளிலும் ஈடுபடுவார். அப்படி ஒரு சூழலில் சமீபத்தில் இரண்டு டி20 போட்டி சர்வதேச போட்டிகளில் மட்டுமே ஆடி தனது திறனை நிரூபித்துள்ள அபிஷேக் ஷர்மா, வரும் காலத்தில் முக்கியமான வீரராக உருவெடுப்பார் என்றும் தெரிகிறது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டக் அவுட்டாகி இருந்த அபிஷேக் ஷர்மா, இரண்டாவது டி20 போட்டியில் சதம் அடித்து அசர வைத்திருந்தார். அத்துடன் மட்டுமில்லாமல் ரோஹித் ஷர்மா உள்ளிட்ட சில முக்கியமான வீரர்களின் சாதனையையும் அந்த சதத்தால் தகர்த்திருந்த அபிஷேக் ஷர்மா, வரும் போட்டிகளில் எப்படி ஆடுவார் என்பதை பார்க்கவும் ரசிகர்கள் ஆவலாக இருந்து வருகின்றனர்.
தற்போது 23 வயதே ஆகும் அபிஷேக் ஷர்மா, ஒரு நல்ல வீரராக உருவெடுத்து வந்தாலும் அவரைச் சுற்றி நடந்த பல்வேறு சர்ச்சையான சம்பவங்களும், காதல் பயணம் குறித்தும் சில முக்கியமான தகவல்களையும் தற்போது பார்க்கலாம். கடந்த பிப்ரவரி மாதம் தான்யா சிங் என்ற மாடல் விபரீத முடிவு எடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சமயத்தில் சூரத் போலீஸ் அபிஷேக் ஷர்மாவையும் இந்த வட்டத்துக்குள் விசாரித்திருந்தது.
ஏனென்றால் தனியா சிங் விபரீத முடிவு எடுத்து உயிரை மாய்த்துக் கொள்வதற்கு முன்பு வரை சில மாதங்கள் அவரும் அபிஷேக் ஷர்மாகவும் அடிக்கடி பேசிக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பல்வேறு சர்ச்சையான சம்பவங்களும் அபிஷேக் சர்மாவை சூழ்ந்திருந்த நிலையில் அவர் தியா மேத்தா என்ற மாடலை காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான சில புகைப்படங்கள் வைரலாக இது பற்றி அபிஷேக் ஷர்மா எந்த வார்த்தையும் தெரிவித்ததே கிடையாது.
இதேபோல அபிஷேக் ஷர்மாவின் தந்தையான ராஜ்குமார் ஷர்மா பற்றி பலரும் தெரியாத எமோஷனலான தகவலும் உள்ளது. இடதுகை பேட்ஸ்மேனான அவர், 22 வயது வரை மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் ஆடி உள்ளார். இந்திய அணிக்காக தேர்வாக முடியாததால் யுஏஇ வரைக்கும் சென்று ஆடி திரும்பி உள்ளவர் தான் ராஜ்குமார் சர்மா. இதனைத் தொடர்ந்து அவர் அம்ரித்சர் கிரிக்கெட் அசோசியேஷனில் முழுநேர பயிற்சியாளராகவும் இருந்து வருகிறார்.
அப்படி ஒரு சூழலில், ராஜ்குமார் ஷர்மாவால் முடியாததை அவரது மகன் தற்போது சர்வதேச போட்டிகளிலும் சாதிக்க தொடடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.