- Advertisement -
Homeவிளையாட்டுஅந்த ஹாட்ரிக் சிக்ஸர்.. என் செஞ்சுரிக்கு காரணமே ருத்துராஜ் தான்.. அவரு சொன்ன அந்த வார்த்தை......

அந்த ஹாட்ரிக் சிக்ஸர்.. என் செஞ்சுரிக்கு காரணமே ருத்துராஜ் தான்.. அவரு சொன்ன அந்த வார்த்தை… – அபிஷேக் ஷர்மா..

- Advertisement-

கடந்த மே மாதம் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் நிச்சயம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிரடியை யாருமே மறந்திருக்க மாட்டார்கள். அந்த அணியின் தொடக்க வீரர்களான அபிஷேக் ஷர்மா மற்றும் ஹெட் ஆகியோர் கிடைக்கும் வாய்ப்புகள் எல்லாம் சிக்ஸர்களுக்கு பறக்க விட, பவர் பிளே ஓவர்களிலேயே எளிதாக 100 ரன்களைக் கடந்திருந்தனர்.

இந்த இரண்டு பேரும் மிகப்பெரிய அளவில் கிரிக்கெட் வட்டாரத்தில் பேசு பொருளாக சமீபத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் இளம் வீரர் அபிஷேக் ஷர்மாவுக்கும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்திருந்தது. சர்வதேச பந்து வீச்சாளர்களையே ஐபிஎல் தொடரில் அலற வைத்த அவர், நிச்சயம் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக மிக அதிரடியாக ஆடுவார்கள் என்றும் அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் முதல் போட்டியில் அவர் டக் அவுட்டாக இரண்டாவது போட்டியில் அப்படியே வேறொரு வெர்ஷனை காட்டி பட்டைய கிளப்பியுள்ளார். வெறும் 47 பந்துகளில் சதமடித்த அவர், ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து அதனை எட்டியிருந்தது சிறப்பம்சமாக பார்க்கப்பட்டது. 47 பந்துகளில் 100 ரன்களை அடித்த அபிஷேக் ஷர்மாவால் இந்திய அணி 234 ரன்கள் சேர்த்திருந்தது.

தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வேவால் 134 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால் இந்திய அணி தங்களின் முதல் வெற்றியை இந்த தொடரில் பதிவு செய்துள்ளது. சதமடித்து இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த அபிஷேக் ஷர்மா, இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும் வென்றிருந்தார்.

- Advertisement-

அதற்கு பின் அவர் பேசுகையில், “நேற்று நடந்த டி20 போட்டி தோல்வி எங்களுக்கு எளிதானதாக அமையவில்லை. அதிலிருந்து மீண்டு வந்து சிறந்த ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்தி உள்ளோம். டி20 போட்டிகள் என்பது வேகத்தை கடைசி வரையில் எடுத்து செல்வது தான் என நான் உணர்கிறேன். மேலும் இந்த நாளும் எனக்கானது என்றும் நினைத்திருந்தேன். என் மீது அதிக நம்பிக்கை வைத்த கேப்டன் மற்றும் பயிற்சியாளர்களுக்கு நன்றி.

இந்த நாள் உங்களுடையது என தோன்றும் போது உங்களின் சிறந்த ஆட்டத்தை நீங்கள் வெளிபடுத்த வேண்டும். எனது கேட்ச் மிஸ் ஆனதும் இது உனது நாள் என தோன்றியதுடன் பொறுப்பை நானே எடுத்து ஆட வேண்டுமென முடிவு செய்தேன். நானும் ருத்துராஜூம் அடிக்கடி பேட்டிங் பற்றி பேசிக் கொண்டே இருந்தோம். நான் தொடர்ந்து அடித்து ஆடும்படி ருத்து என்னிடம் கூறிக் கொண்டே இருந்தார்.

என்னுடைய அதிரடி ஆட்டத்தின் மீது எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. அது எனக்கான அதிரடியை வெளிப்படுத்தும் வாய்ப்பாக இருக்கும் போது முதல் பந்தாக இருந்தாலும் அடித்து ஆடத் தான் நினைப்பேன்” என அபிஷேக் ஷர்மா கூறி உள்ளார்.

சற்று முன்