- Advertisement 3-
Homeவிளையாட்டுஹர்ஷல் படேல் ஓவரை அடிச்சு நொறுக்க பிளான்.. அவங்களுக்கு என்னோட ஸ்பெஷல் நன்றி.. நெகிழ்ந்த அபிஷேக்...

ஹர்ஷல் படேல் ஓவரை அடிச்சு நொறுக்க பிளான்.. அவங்களுக்கு என்னோட ஸ்பெஷல் நன்றி.. நெகிழ்ந்த அபிஷேக் ஷர்மா..

- Advertisement 1-

நடப்பு ஐபிஎல் தொடரில் இன்னும் ஒரு லீக் போட்டி மீதம் இருக்கும் நிலையில் இந்த சீசனில் ஏராளமான இளம் வீரர்கள் அதிகம் கவனத்தை பெற்றிருந்தனர். அதில் முக்கியமான ஒருவராக இருந்து வரும் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா இந்த சீசனில் அவர்கள் பிளே ஆப் வருவதற்கும் மிக முக்கிய காரணமாக விளங்கி இருந்தார். பல போட்டிகளில் 20 பந்துகளுக்கு உள்ளே அரைச்சதங்களை அடித்து நொறுக்கி நல்ல ஸ்கோரை ஹைதராபாத் குவிப்பதற்கும் உதவி இருந்த அபிஷேக் ஷர்மா தங்களின் கடைசி லீக் போட்டியிலும் சிறப்பாக ஆடி ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார்.

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்திருந்த ஹைதராபாத் அணி இன்னும் புள்ளி பட்டியலில் எந்த இடம் என்பதை உறுதியாக கணிக்க முடியாத சூழலில் தங்களின் கடைசி லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து ஆடி இருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 10 இந்திய வீரர்களை வைத்து மிகச் சிறப்பாக செயல்பட்டு 214 ரன்களை குவித்திருந்தனர்.

தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் ஹெட் முதல் பந்தில் அவுட் ஆனாலும் மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் ஷர்மா சிறப்பாக ஆடி ரன் சேர்த்தார். வழக்கம்போல கிடைக்கும் பந்துகளை எல்லாம் பவுண்டரிக்கு விளாசிய அபிஷேக் ஷர்மா, 28 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் ஐந்து ஃபோர்களுடன் 66 ரன்கள் எடுத்து அவுட்டாகி இருந்தார்.

இவரைப் போலவே ராகுல் திரிபாதி, நிதிஷ் ரெட்டி, க்ளாஸன் என அனைவரும் அதிரடியாக ஆடி ரன் சேர்த்ததால் விக்கெட்டுகளை இழந்த போதிலும் கடைசி ஓவரின் முதல் பந்தில் வெற்றியை உறுதி செய்தது ஹைதராபாத். இந்த வெற்றியால் தற்போது இரண்டாவது இடத்தில் ஹைதராபாத் இருந்தாலும் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் போட்டியின் முடிவுக்காக காத்திருக்க வேண்டிய சூழலிலும் உள்ளனர்.

- Advertisement 2-

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சிறப்பாக ஆடி ஹைதராபாத் வெற்றி பெற காரணமாக இருந்த அபிஷேக் ஷர்மா ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார். இதற்குப் பின் அவர் பேசுகையில், “அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் ஒரு நல்ல காலம் வருவது போல எனக்கு தற்போது அமைந்துள்ளது. அதனால் அந்த வாய்ப்பினை நான் சிறப்பாக ஆடி எனது அணிக்காக பயன்படுத்தி வருகிறேன்.

பஞ்சாப் அணிக்கு எதிராக இலக்கு பெரிதாக இருந்ததால் எனது அணிக்காக நல்ல பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். எனது முன்னாள் பயிற்சியாளர் லாராவுடன் தற்போது தொடர்ந்து தொடர்பில் இருந்தே நிறைய விஷயங்களை கற்றுக் கொள்கிறேன். அதுவும் எனக்கு பெரிய அளவில் உதவியது. லூஸ் பந்துகளுக்காக காத்திருந்து பந்து வீச்சாளர்களுக்கு எதிராக கடினமாக ஆடி அவர்களுக்கு நெருக்கடியையும் நான் உருவாக்கி வருகிறேன்.

பஞ்சாப் அணியின் ஹர்ஷல் படேல் ஓவருக்காக நான் காத்திருந்ததை நிதிஷ் ரெட்டியிடம் கூறினேன். மிடில் ஓவரில் அவர் விக்கெட் எடுத்ததால் அவரது பந்தை அடித்து ஆட வேண்டும் என்று நினைத்திருந்தேன். மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கும் பிட்ச் பராமரிப்பாளர்கள் மற்றும் மைதான ஊழியர்கள் அனைவருக்கும் எங்கள் ஸ்டைலில் ஆட பிட்ச்சை தயார் செய்ததற்கு எனது நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறி உள்ளார்.

சற்று முன்