- Advertisement 3-
Homeவிளையாட்டுஅம்பாதி ராயுடு இல்லாததால் சிஎஸ்கே அணிக்கு ஏற்படப்போகும் 3 நண்மைகள்

அம்பாதி ராயுடு இல்லாததால் சிஎஸ்கே அணிக்கு ஏற்படப்போகும் 3 நண்மைகள்

- Advertisement 1-

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய வீரராக விளங்கியவர் அம்பத்தி ராயுடு. சிஎஸ்கே அணிக்காக 2018 ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் ராயுடு, மூன்று முறை ஐபிஎல் கோப்பையையும் சிஎஸ்கே அணிக்காக வென்று கொடுத்திருக்கிறார்.

38 வயதான ராயுடு இனி ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் சிஎஸ்கே அணிக்கு ஏற்பட்டுள்ள நன்மைகள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

ராயுடு ஓய்வு பெற்றதன் மூலம் சிஎஸ்கேவுக்கு தற்போது கூடுதலாக 6 கோடியை 75 லட்சம் ரூபாய் மிஞ்சும். இதை வைத்து அவர்கள் மினி ஏலத்தில் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கிக் கொள்ளலாம். குறிப்பாக சிஎஸ்கே அணி இளம் வீரர்களை குறி வைத்து வாங்கும்.

மேலும் தோனிக்கு வயதாகி கொண்டு வருவதால் அந்த தொகையை வைத்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை கூட வாங்கலாம். ராயுடுக்கு வயதாகி விட்டதால் அவரை பில்டிங்கில் தோனி வைக்கவில்லை.

- Advertisement 2-

இதனால் அவரை இம்பெக்ட் வீரராக பேட்டிங்கிற்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டார். இந்த நிலையில் ராயுடு இல்லாததால் தற்போது சிஎஸ்கே அணி பில்டிங் இளம் வீரர்களை கொண்டதாக இருக்கும் .ஷாயிக் ரசித்,சேனாபதி, நிஷாந்த் சிந்து, ராஜவர்தன் ஹங்கர்கேகர் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

இதேபோன்று ராயுடு பில்டிங்கில் நிறுத்தக்கூடாது என்பதற்காக அவரை சிஎஸ்கே அணி இம்பாக்ட் வீரராக பயன்படுத்தியது. இந்த நிலையில் ராயுடு இல்லை என்றால் இனி சிஎஸ்கே அணி இம்பேக்ட் வீரராக வேக பந்துவீச்சாளரை அல்லது பேட்ஸ்மனையோ தங்களுடைய சூழ்நிலைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.

எனினும் ராயுடு போன்ற வீரரின் அனுபவமும் பேட்டிங் திறமையும் சிஎஸ்கேவுக்கு நிச்சயமாக மைனஸ் பாயிண்டாக தான் அமையும். குஜராத் அணிக்கு எதிரான நடந்து முடிந்த பைனலிலும் மற்ற வீரர்கள் தடுமாறிய நிலையில் ராயுடு தான் ஆட்டத்தை சிக்ஸர் பவுண்டரி அடித்து வெற்றிக்கு அருகே நகர்த்திச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்