- Advertisement -
Homeவிளையாட்டுசி.எஸ்.கே விற்கு எழுந்த புதிய சிக்கல்? கேஸ் போட்ட வழக்கறிஞர் - டிக்கெட் விற்பனைக்கு இடைக்கால...

சி.எஸ்.கே விற்கு எழுந்த புதிய சிக்கல்? கேஸ் போட்ட வழக்கறிஞர் – டிக்கெட் விற்பனைக்கு இடைக்கால தடை விதிக்க கோரிக்கை.

- Advertisement-

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை நடந்த ப்ளே ஆஃப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையில் முறைகேடு நடந்துள்ளதாக வழக்கறிஞர் அசோக் சக்ரவர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

இது சம்மந்தமாக அவர் தன்னுடைய சமூகவலைதளப் பதிவில் “இன்று நான் சென்னை சூப்பர் கிங்ஸ், பிசிசிஐ மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் அசோஷியேஷன் ஆகியவற்றுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளேன். நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டித் தொடரில், சென்னை, எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் டிக்கெட் விற்பனையில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் அதன் மூலம் கள்ளச் சந்தை மற்றும் சந்தேகத்திற்கிடமான ஆன்லைன் டிக்கெட் விற்பனை ஆகியவை நடந்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.

இதனால் சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் இரண்டு ப்ளே ஆஃப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனைக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் எனவும் என் மனுவில் கூறியுள்ளேன். மேலும் இதுவரை விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்களின் ஆன்லைன் முன்பதிவு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளேன்.” எனப் பதிவு செய்துள்ளார்.

ஆனாலும் இன்று மதியமே ப்ளே ஆஃப் போட்டிகளுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்கிவிட்டது. லீக் போட்டிகளை போல இல்லாது ப்ளே ஆஃப் போட்டிகளுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே டிக்கெட் விற்பனை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

- Advertisement-

முன்னதாக சென்னை அணி விளையாடும் போட்டிகளைக் காண ஆர்வமாக இருந்த ரசிகர்கள் கவுண்டரில் டிக்கெட் கிடைக்கவில்லை என்றும் ஆனால் கள்ளச்சந்தையில் விலை அதிகமாக்கப்பட்டு விறபனை நடக்கிறது என்றும் குற்றம் சாட்டி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் போட்டிகள் நடப்பதும், சிஎஸ்கே அணி கேப்டன் தோனிக்கு இது கடைசி ஐபிஎல் தொடராக இருக்குமோ என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு  இருப்பதாலும் போட்டியை நேரில் காணவேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது. அதைப் பயன்படுத்திக் கொண்டு டிக்கெட் விலை பல மடங்கு உயர்த்தி விற்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சற்று முன்