- Advertisement 3-
Homeவிளையாட்டுஆப்கானிஸ்தான் அணியால் இந்தியாவுக்கு காத்திருக்கும் கண்டம்.. எப்படி தான் சமாளிக்க போறாங்களோ..

ஆப்கானிஸ்தான் அணியால் இந்தியாவுக்கு காத்திருக்கும் கண்டம்.. எப்படி தான் சமாளிக்க போறாங்களோ..

- Advertisement 1-

இந்திய கிரிக்கெட் அணி கடந்த சில ஆண்டுகளாகவே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதே போல, ஐபிஎல் தொடரில் ஜொலிக்கும் வீரர்கள் இந்திய அணியிலும் இடம்பிடித்து பட்டையைக் கிளப்பி வருவதால் நம்பர் 1 அணியாகவும் அவர்கள் விளங்கி வருகின்றனர். பல பலங்கள் இந்திய அணியின் பக்கம் இருந்தாலும் ஒரே ஒரு விஷயம் பெரிய பிரச்சனையாக பார்க்கப்பட்டு வருகிறது.

சிறந்த அணி என பெயர் எடுத்துள்ள இந்திய அணி, 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு எந்தவித ஐசிசி டிராபியையும் வென்றதே இல்லை. இரண்டு முறை நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் முன்னேறி இருந்த ஒரே அணி இந்தியா தான். அதுவரை சிறப்பாக ஆடி வந்த இந்திய அணி, இறுதி போட்டியில் முறையே நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரே தோல்வியை தழுவி இருந்தது. இதே போல, 2022 ஆம் ஆண்டு டி 20 உலக கோப்பைத் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் படு தோல்வி அடைந்து வெளியேறி இருந்தது இந்திய அணி.

கடந்த நவம்பர் மாதம் நடந்து முடிந்த உலக கோப்பைத் தொடரை வெல்ல பல சாதகங்களான விஷயங்கள் இந்திய அணியின் பக்கம் இருந்தது. ஆனாலும் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தோல்வி அடைந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்திருந்தது. இதனால், நிச்சயம் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி 20 உலக கோப்பைத் தொடரில் மிக சிறப்பாக தங்களிடம் உள்ள தவறுகளை திருத்திக் கொண்டு கோப்பையை தட்டிச் செல்லும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

9 வது டி 20 உலக கோப்பை, ஜூன் மாதத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வைத்து நடைபெற உள்ளது. அமெரிக்காவில் வைத்து நடைபெறும் முதல் ஐசிசி தொடரும் இது தான். இதனால் அனைத்து அணிகளுக்கும் நிச்சயம் சவாலான தொடராக இருக்கும் என்றே தெரிகிறது. இந்த நிலையில், இந்த தொடருக்காக இந்திய அணிக்கு காத்திருக்கும் சவால்கள் பற்றி முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

- Advertisement 2-

“ஆப்கானிஸ்தான் அணி நிச்சயம் இந்திய அணிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். அமெரிக்கா போன்ற ஆடுகளங்கள் நிச்சயம் அவர்களுக்கு சாதகமாக இருக்கும் என தெரிகிறது. இவர்களை போல ஆஸ்திரேலிய அணியும், டி 20 கிரிக்கெட்டில் அற்புதமாக ஆடும் இங்கிலாந்து அணியும் இந்திய அணிக்கு அச்சுறுத்த்தலாக இருப்பார்கள்” என கம்பீர் கூறி உள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவுக்கு சவாலாக இருப்பார்கள் என கம்பீர் கூற காரணம், கடந்த உலக கோப்பைத் தொடரில் இங்கிலாந்து, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளை அவர்கள் வீழ்த்தி இருந்தது தான். அதே போல, ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தும் வாய்ப்பையும் அவர்கள் நூலிழையில் தவற விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்