- Advertisement -
Homeவிளையாட்டுஉடைந்துபோன நெதர்லாந்து... ஆஃப்கானிஸ்தானுக்கு 4வது வெற்றி... அரையிறுதி பந்தயத்திலும் முன்னிலை... என்னென்னமோ நடக்குதே

உடைந்துபோன நெதர்லாந்து… ஆஃப்கானிஸ்தானுக்கு 4வது வெற்றி… அரையிறுதி பந்தயத்திலும் முன்னிலை… என்னென்னமோ நடக்குதே

- Advertisement-

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை எதிர்த்து ஆஃப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி கேப்டன் ஸ்காட் எட்வட்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய நெதர்லாந்து அணி அதிரடியாக ரன்களை குவித்தது. ஓடவுட் அதிரடியாக சில பவுண்டரிகளை விளாசியதால், ஆஃப்கானிஸ்தான் பவுலர்கள் திணறினார்கள்..

ஆனால் சிறப்பாக ஆடி வந்த மேக்ஸ் ஓடவுட் 42 ரன்களில் ரன் அவுட்டாகி ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த கேப்டன் எட்வர்ட்ஸ் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த அனுபவ வீரர் பேஸ் டி லீட் 3 ரன்களில் ஆட்டமிழக்க, நெதர்லாந்து அணி 97 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இருப்பினும் ஒரு பக்கம் சிறப்பாக ஆடிய ஏஞ்சல்பிரக்ட் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக நெதர்லாந்து அணி 46.3 ஓவர்களில் 179 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் முகமது நபி 3 விக்கெட்டுகளையும், நூர் அஹ்மத் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதேபோல் நெதர்லாந்து அணியின் 4 வீரர்கள் ரன் அவுட் மூலமாக ஆட்டமிழந்தனர்.

பின்னர் வந்த ஆஃப்கானிஸ்தான் அணியில் குர்பாஸ் 10 ரன்களிலும், ஜத்ரான் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி 55 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை விட்டது. இதனால் லோ ஸ்கோரிங் த்ரில்லராக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு அதிகரித்த சூழலில், கேப்டன் ஷாகிதியும், ரஹ்மத் ஷாவும் இணைந்து ஆட்டத்தை ஆஃப்கானிஸ்தான் பக்கம் திருப்பினர். அதிலும் சிறப்பாக ஆடிய ரஹ்மத் ஷா அரைசதம் அடித்து அசத்தினார்.

- Advertisement-

இந்த உலகக்கோப்பை தொடரில் ரஹ்மத் ஷா அடிக்கும் 3வது அரைசதமாகும். அவர் 54 ரனக்ளில் ஆட்டமிழக்க, பின்னர் ஷாகிதி – ஒமர்ஸாய் இணை ஆஃப்கானிஸ்தான் அணியை சிறப்பாக கரை சேர்த்தது. 31.3 ஓவர்களில் ஆஃப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இது ஆஃப்கானிஸ்தான் அணி உலகக்கோப்பை தொடரில் 4வது வெற்றியாகும்.

இந்த வெற்றியின் மூலமாக ஆஃப்கானிஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேபோல் நாளைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தோல்வியடைந்தால் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு கீழ் செல்லும் நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்