- Advertisement -

சரியான ரன் ரேட் பத்தி யாருமே எங்க கிட்ட சொல்லல… சிலது ரொம்ப பெரிய தவறு… ஆப்கான் பயிற்சியாளர் ஆதங்கம்

லாகூர் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி பரபரப்புக்கு சற்றும் குறைவில்லாமல் கடைசி விக்கெட் வரை மிகவும் சுவாரசியமாக சென்றது. அதிலும் குறிப்பாக இலங்கை அணி நிர்ணயித்த 292 ரன்கள் என்கிற இலக்கினை வெகுவிரைவாக துரத்திய ஆப்கானிஸ்தான் அணி இறுதியில் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்திருந்தாலும் ஆப்கானிஸ்தான் அணி போராடிய விதம் அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்களை குவித்தது. அதனால் 292 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாட துவங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு குறிப்பிட்ட ஓவரில் போட்டியை முடித்தால் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

- Advertisement -

அந்த வகையில் 37.1 ஓவரில் 292 ரன்கள் எடுத்தால் ஆப்கானிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறலாம் என்கிற நிலையில் துவக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடிய ஆப்கானிஸ்தான அணி கிட்டத்தட்ட வெற்றியை நோக்கி நகர்ந்தது.

ஒரு கட்டத்தில் 36-வது ஓவரின் போது வெற்றிக்கு 15 ரன்கள் தேவை என்கிற நிலையில் அந்த ஓவரில் ரஷீத் கான் மட்டும் 12 ரன்கள் குவித்தார். எனவே அடுத்த ஓவரில் மீதமுள்ள ஒரு பந்தில் மூன்று ரன்கள் தேவைப்பட்டது. அப்போது முஜிபுர் ரஹ்மான் பந்தினை தூக்கி அடித்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அதனால் ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றி வாய்ப்பு முடிந்ததாக பார்க்கப்பட்ட வேளையில் அடுத்த இரண்டு பந்துகளில் ஒரு இரண்டு ரன்களும், ஒரு சிக்ஸரையும் அடித்தால் வெற்றி என்ற இலக்கு மீண்டும் அறிவிக்கப்பட்டது. இப்படி சரியான தெளிவு இல்லாமல் கணக்குகள் வழங்கப்பட்டதால் ஆப்கானிஸ்தான் அணி அந்த கடைசி இரண்டு விக்கெட்டுகளையும் இழந்திருந்தனர்.

இந்நிலையில் போட்டி முடிந்து இந்த தோல்வி குறித்து பேசிய ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஜோனாதன் டிராட் கூறுகையில் : போட்டியின் போது வெற்றிக்கான கணக்கீடுகள் சரியாக எங்களிடம் தெரிவிக்கப்படவில்லை. ஒருபுறம் 37.1 ஓவரில் வெற்றி இலக்கை துரத்தினால் அடுத்த சுற்று செல்வோம் என்று சொல்லப்பட்டது. ஆனால் அதே ஓவரில் 295 அல்லது 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்பது எங்களுக்கு சொல்லப்படவில்லை என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தோல்விக்கான காரணமா குறித்து அவர் பேசுகையில், எங்கள் தோல்விக்கு ஒரே ஒரு காரணத்தை குறிப்பிட முடியாது. நாங்கள் சில விடயங்களை சிறப்பாக செய்திருக்கலாம். அது இன்றிய போட்டிக்கும், பங்களாதேஷுக்கு எதிரான போட்டிக்கும் பொருந்தும். சில இடம்களில் மிகப்பெரிய தவறுகளை செய்தோம். அதன் விளைவு தான் இந்த தோல்வி. நாங்கள் இன்னும் சிறப்பாக பவுலிங் செய்திருக்கலாம் என்று அவர் கூறினார்.

- Advertisement -
Published by
Tags: Rashid Khan

Recent Posts