- Advertisement 3-
Homeவிளையாட்டுதோனி சொன்னதெல்லாம் நோட் பண்ணி வச்சிருக்கன்... அவர் எண்ணலாம் சொல்லி இருக்காரு தெரியுமா? - குர்பாஸ்...

தோனி சொன்னதெல்லாம் நோட் பண்ணி வச்சிருக்கன்… அவர் எண்ணலாம் சொல்லி இருக்காரு தெரியுமா? – குர்பாஸ் பேச்சு

- Advertisement 1-

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி நமது நாட்டு இளம் வீரர்களுக்கு மட்டும் குருவாக இல்லாமல் உலகம் முழுவதும் உள்ள இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு காட் பாதர் போல் விளங்கி வருகிறார்.

தோனி குருவாக ஏற்றுக் கொண்டிருப்பதாக ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரஹமத்துல்லா குர்பாஸ் கூறியிருக்கிறார். ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு சீசனில் குர்பாஸ் பதினோரு போட்டிகளில் கே கே ஆர் அணிக்காக விளையாடி 227 ரன்களை குவித்து இருக்கிறார்.

இந்த நிலையில் தோனி குறித்து அவர் பேசியிருப்பது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் முதல் முறை நான் தோனியை பார்த்த போது நான் குஜராத் அணியில் இருந்தேன். அப்போது ஆட்டத்தில் இருந்த நெருக்கடி காரணமாக என்னால் தோனியை சந்தித்து பேச முடியவில்லை.

ஆனால் அவரை சந்தித்தபோது என்னை மதித்து பேசினார். எனக்கு நிறைய அறிவுரைகளையும் நம்பிக்கையும் தனது பேச்சு மூலம் கொடுத்தார். இந்த ஆண்டு நான் தோனியை பார்த்தபோது நான் உத்வேகத்துடன் இருந்தேன். இம்முறை கிரிக்கெட் குறித்தும் வாழ்க்கை நெறிமுறைகள் குறித்தும் நான் அவரிடம் பேசினேன் என் வாழ்க்கையில் எப்படி நான் முன்னேற்றுவது என்பது குறித்தும் நான் அவரிடம் கேட்டு அறிந்தேன்.

- Advertisement 2-

அவர் எனக்கு நிறைய அறிவுரைகளை வழங்கி இருக்கிறார். அதனை நான் ஒரு நோட்டு புத்தகத்தில் எழுதி வைத்திருக்கிறேன். அவருடைய ஒவ்வொரு வார்த்தைகளும் என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

என்னுடைய எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என நான் நம்புகிறேன். தோனி எப்போதுமே என்னுடைய குருவாக இருப்பார் என்று குர்பாஸ் கூறியுள்ளார். நடந்து முடிந்த ஜிம் ஆஃப்ரோ டி10 போட்டியில் 9 ஆட்டங்களில் விளையாடி 282 ரன்கள் அடித்திருந்தது அதிக ரன்களைப் பெற்ற வீரர் என்ற விருதை வாங்கினார். தோனி பேச்சைக் கேட்ட பிறகு தற்போது குர்பாஸ் உலகம் முழுவதும் நடைபெற்று வரும் டி20 தொடர்களில் சிறப்பாக விளையாடி சாதித்து வருகிறார்.

சற்று முன்