Homeகிரிக்கெட்SL vs AFG : 16 ரன் கூட தாண்டாத 9 பேர்... வாரி சுருட்டிய...

SL vs AFG : 16 ரன் கூட தாண்டாத 9 பேர்… வாரி சுருட்டிய ஆப்கானிஸ்தான்… தொடரில் இருந்து வெளியேறிய இலங்கை அணி.. நடந்தது என்ன?

-Advertisement-

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் பரபரப்பு நாளை தொடங்கவுள்ள நிலையில், ஆசிய போட்டிகளில் நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதன் காலிறுதி சுற்றின் 3வது போட்டி இன்று நடைபெற்றது. இதில் முன்னணி அணியான இலங்கை அணியை எதிர்த்து ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடியது.

இதில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் ஷஹன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி சார்பாக நூர் அலி ஜத்ரான் 52 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார். பின்னர் ஷாகித்துல்லா 23 ரன்ன்களும், ஷாசாத் 20 ரன்களும் எடுத்தனர். மீதமுள்ள வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

-Advertisement-

இதன் காரணமாக 18.3 ஓவர்களில் 116 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இலங்கை அணி தரப்பில் துஷாரா 3 ஓவர்களில் வீசி 17 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதேபோல் கேப்டன் ஷஹன் 2 விக்கெட்டுகளையும், வியாஸ்காந்த் மற்றும் லஹிரு ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதன்பின் எளிய இலக்கை விரட்டிய இலங்கை அணி அதிரடியாக தொடங்கியது. தொடக்க வீரர் லசித் 2 பவுண்டரிகள், சிக்ஸ் என்று விளாச, 2 ஓவர்களில் 19 ரன்கள் சேர்க்கப்பட்டது. ஆனால் 3வது ஒவரில் லசித் 16 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் டேனியல் 9 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த ஃபெர்னாண்டோ 5 ரன்களிலும், பண்டாரா 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

-Advertisement-

இதனால் இலங்கை அணி 60 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதேபோல் இலங்கை அணியின் சரிவும் இங்கிருந்தே தொடங்கியது. தொடர்ந்து வந்த உடாரா டக் அவிட்டாகியும், ஃபெர்னாண்டோ 9 ரன்களிலும், லஹிரு 1 ரன்னிலும், கேப்டன்ன் சஹன் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 84 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து இலஙிகை அணி தடுமாறியது.

இறுதியாக 19.1 ஓவர்களில் இலங்கை அணி 108 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன் மூலம் ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. வலிமையான இலங்கை அணியை ஆஃப்கானிஸ்தான் வீழ்த்தி இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அரையிறுதியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடுகிறது.

-Advertisement-

சற்று முன்