Homeகிரிக்கெட்பாக், இலங்கை எல்லாம் ஓரம் போங்க... அரையிறுதியில் ஆப்கானிஸ்தான்?... சூடுபிடிக்கும் உலகக் கோப்பை 2023

பாக், இலங்கை எல்லாம் ஓரம் போங்க… அரையிறுதியில் ஆப்கானிஸ்தான்?… சூடுபிடிக்கும் உலகக் கோப்பை 2023

-Advertisement-

உலகக் கோப்பை 2023 தொடரின் லீக் போட்டிகள் கிட்டத்தட்ட நிறைவு பகுதிக்கு வந்துவிட்டன. நேற்று (நவம்பர் 3) நடைபெற்ற 34-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி துவக்கத்திலேயே விக்கெட்டை பறிக்கொடுத்தது. எனினும், அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து இரட்டை இலக்க ரன்களை குவித்தனர்.

பிறகு, சொதப்ப ஆரம்பித்த நெதர்லாந்து அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நேற்றைய போட்டியில் நெதர்லாந்து பேட்டிங் செய்த இன்னிங்ஸ்-இல் மட்டும் அந்த அணி வீரர்கள் நான்கு பேர் ரன் அவுட் ஆகி வெளியேறினர். இதன் மூலம் நெதர்லாந்து அணி 179 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

-Advertisement-

பிறகு களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 111 பந்துகளில் 180 என்ற இலக்கை துரத்தி அபார வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் அணிக்கு ரகமத் ஷா மற்றும் ஹஷ்மதுல்லா ஷாஹிடி முறையே 52 மற்றும் 56 ரன்களை குவித்து வெற்றிக்கு வித்திட்டனர். இந்த வெற்றி மூலம் ஆப்கானிஸ்தான் அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டதோடு, புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு வந்துள்ளது .

இதன் காரணமாக நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற அணிகள் அடுத்தடுத்து விளையாட இருக்கும் போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன. இந்த போட்டிகளின் முடிவை பொருத்து, நான்காவது அணியாக அடுத்த சுற்றுக்கு முன்னேற கிட்டத்தட்ட நான்கு அணிகள் போட்டியிடுகின்றன.

-Advertisement-

இதனால், இந்த அணிகள் அடுத்தடுத்து விளையாடும் போட்டிகள் அனைத்தும் பரபரப்பான ஒன்றாக இருக்கும். அந்த வகையில், நடப்பு உலகக் கோப்பை தொடரின் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்திற்கு எந்த அணி முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் இன்றைய (நவம்பர் 4) இரண்டு போட்டிகள் தவிர்த்து மொத்தம் 9 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளில் கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையில் அதிக வெற்றி மற்றும் ரன் ரேட் பெறும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும். நவம்பர் 12-ம் தேதியுடன் லீக் சுற்று போட்டிகள் நிறைவு பெறுகின்றன.

இதைத் தொடர்ந்து அரையிறுதி சுற்றுக்கான இரண்டு போட்டிகள் நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. இறுதிப்போட்டி நவம்பர் 19-ம் தேதி நடைபெற இருக்கிறது.

-Advertisement-

சற்று முன்