- Advertisement -
Homeவிளையாட்டுஇதுலயும் தோனி மாதிரியா.. 7 இல்லாம இன்னொரு லிஸ்ட்லயும் தல மாதிரியே ருத்துராஜ் செஞ்ச விஷயம்..

இதுலயும் தோனி மாதிரியா.. 7 இல்லாம இன்னொரு லிஸ்ட்லயும் தல மாதிரியே ருத்துராஜ் செஞ்ச விஷயம்..

- Advertisement-

இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே தொடரை சொந்தமாக்க இன்னும் ஒரு போட்டியில் மட்டுமே வெல்ல பாக்கி உள்ளது. நடந்து முடிந்த மூன்று போட்டிகளில் இரண்டில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் மீதம் 2 போட்டிகள் இருப்பதால் இந்தியாவுக்கான வாய்ப்பு தான் அதிகமாகவும் இருக்கிறது.

முதல் போட்டியில் கில் தலைமை, இந்திய அணியின் பேட்டிங் வரிசை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அவர்களுக்கு எடுபடாமல் போக, அடுத்த இரண்டு போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றும் அசத்தி உள்ளனர். அதே போல, மூன்றாவது வீரராக களம் இறங்கி விராட் கோலி இடத்தில் ஆடிவரும் இளம் வீரர் மற்றும் சிஎஸ்கே அணியின் கேப்டனான ருத்துராஜ் கெய்க்வாட், மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

- Advertisement -

கடந்த போட்டியில் அரைச் சதம் கடந்து 77 ரன்கள் சேர்த்த ருத்துராஜ், மூன்றாவது போட்டியில் 49 ரன்கள் அடித்திருந்தார். 2 போட்டியிலும் இந்திய அணி நல்ல ரன்கள் சேர்க்க முக்கிய காரணமாக இருந்த ருத்துராஜ், தொடர்ச்சியாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் டி20 மற்றும் ஒரு நாள் போட்டி உள்ளிட்டவற்றில் நல்ல வீரராக உருவெடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே அவர் அடித்த ரன்களையும் தோனியுடன் ஒப்பிட்டு பல்வேறு கருத்துக்களை ரசிகர்கள் தெரிவித்து வந்தனர். இவர் முதல் டி20 போட்டியில் 7 ரன்கள் எடுக்க, இரண்டாவது போட்டியில் 77 ரன்களை 7 வது மாதம், 7 ஆம் தேதியான தோனி பிறந்த நாளில் எடுத்திருந்தார்.

- Advertisement-

இப்படி அனைத்துமே தோனியின் ஜெர்சி எண்ணுடன் ஒப்பிட்டு ஒன்றாக இருக்க, டி20 போட்டி பேட்ஸ்மேன்கள் தரவரிசையிலும் சமீபத்தில் 7 வது இடத்தை ருத்துராஜ் பிடித்திருந்தார். இப்படி அனைத்திலுமே 7 என்று இருக்க இது தொடர்பாக தொடர்ந்து ட்ரெண்டிங்கிலும் ருத்துராஜ் இருந்து வந்தார்.

அப்படி ஒரு சூழலில் தற்போது மற்றொரு விஷயத்திலும் தோனிக்கு நிகராக ருத்துராஜ் இடம் பிடித்துள்ளது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ருத்துராஜிற்கு முன்பாக, இரண்டு இந்திய வீரர்கள் டி20 சர்வதேச போட்டிகளில் 49 ரன்களில் அவுட்டாகி உள்ளனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு விராட் கோலி பாகிஸ்தானுக்கு எதிராக 49 ரன்களில் டி20 சர்வதேச போட்டியில் அவுட் ஆகி இருந்தார். இவரைப் போலவே தோனியும் நியூசிலாந்துக்கு எதிராக 2017 ஆம் ஆண்டு 49 ரன்களில் அவுட்டாக, அந்த இந்திய வீரர்களை தொடர்ந்து தற்போது மூன்றாவது இந்திய வீரராக ருத்துராஜூம், 49 ரன்களில் ஒரு டி20 சர்வதேசப் போட்டியில் இந்த ரன்னில் எடுத்து அவுட்டாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்