- Advertisement 3-
Homeவிளையாட்டுகோலி, ரோஹித் வரிசையில்.. ஓய்வினை அறிவித்த முன்னணி இந்திய வீரர்.. மனமுருகிய ரசிகர்கள்..

கோலி, ரோஹித் வரிசையில்.. ஓய்வினை அறிவித்த முன்னணி இந்திய வீரர்.. மனமுருகிய ரசிகர்கள்..

- Advertisement 1-

டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரை தொடர்ந்து மற்றொரு முன்னணி இந்திய வீரரும் தனது ஓய்வினை அறிவித்துள்ளார். 13 ஆண்டுகள் கழித்து ஒரு உலகக்கோப்பை தொடரை இந்திய அணி தற்போது கைப்பற்றியுள்ளது கிரிக்கெட் வீரர்களை தாண்டி ஒட்டு மொத்த இந்தியாவையே எமோஷனலாக கண்ணீர் விட வைத்துள்ளது.

ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்திருந்த இந்திய அணி, ஐசிசி கோப்பையை மட்டும் ஏனோ கைப்பற்ற முடியாமல் இருந்து வந்தனர். இதற்காக அணிகளில் பல மாற்றங்கள் செய்து நிறைய உலக கோப்பை தொடர்களை எதிர்கொண்டு பார்த்த போதிலும் அவர்களால் அந்த கோப்பையை மட்டும் சொந்தமாக்கவே முடியவில்லை.

மேலும் பல ஐசிசி தோல்விகளால் அதனை மறக்க முடியாமல் தவிக்க, ரசிகர்கள் மற்றும் வீரர்கள் மனதில் அது ஒரு வடு போலவே இருந்து வந்தது. இதற்கு மத்தியில் தான் இந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக நிச்சயம் இந்திய அணி கைப்பற்றி பட்டையை கிளப்புவார்கள் என்று அனைவருமே எதிர்பார்த்தனர்.

அந்த நம்பிக்கையை அணியில் இருந்த அனைத்து வீரர்களுமே கொஞ்சம் கூட தவறாமல் மிகச் சிறப்பாக ஆடி தற்போது வெற்றியையும் பெற்றுக் கொடுத்துள்ளனர். இந்திய அணி வெற்றி பெற்றதற்கு அணியில் உள்ள பெரும்பாலான வீரர்களின் பங்கும் அதிகமாக இருந்ததால் இந்த வெற்றியை அவர்கள் ஆனந்த கண்ணீர் வடித்து மைதானத்திலேயே கொண்டாடி இருந்தனர்.

- Advertisement 2-

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஐபிஎல் தொடரில் அதிக விமர்சனத்தை சந்தித்திருந்த மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா, டி20 உலக கோப்பை இந்திய அணி வெல்வதற்கு மிக மிக முக்கிய காரணமாக அமைந்திருந்தார். அவரது பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டுமே பெரிய தாக்கத்தை ஏற்படுத்த இறுதி போட்டியிலும் கூட தென் ஆப்பிரிக்கா அணியை இந்தியா வீழ்த்தியதற்கு காரணமே அவரது பந்துவீச்சு தான்.

இதனால் இரண்டு மாதங்களுக்கு முன்பு அவரை விமர்சித்தவர்கள் தற்போது அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாட தொடங்கிவிட்டனர். இப்படி இந்திய அணியில் பல வீரர்கள் டி20 உலகக் கோப்பை தொடரில் ஜொலித்தாலும் ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவால் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. பேட்டிங்கில் அதிக ரன்கள் குவிக்காத அவர், ஆறு போட்டிகளில் பந்து வீசி ஒரு விக்கெட் மட்டுமே எடுத்திருந்தார்.

இதனால் அவரை சுற்றி கடுமையான விமர்சனங்கள் உருவாக டி20 உலக கோப்பையுடன் அவரும் ஓய்வினை அறிவிப்பாரா என்று தான் கேள்வியும் எழுந்து வந்தது. அப்படி ஒரு சூழலில் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரின் ஓய்வுக்கு பிறகு தற்போது ரவீந்திர ஜடேஜாவும் டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து தனது ஓய்வினை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில உருக்கமான கருத்துக்களையும் ஜடேஜா வெளியிட, ரசிகர்கள் அவருக்கு மற்ற வடிவிலான கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பாகக் செயல்பட வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர். ஜடேஜாவின் கிரிக்கெட் பயணத்தில் அவர் வென்ற முதல் உலக கோப்பை இது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சற்று முன்