- Advertisement -
Homeகிரிக்கெட்ஐபிஎல்-ல் வெறும் 20 லட்சம் தான். ஆனா டிஎன்பிஎல்-ல் அதை விட அதிகமான விலைக்கு எடுக்கப்பட்ட...

ஐபிஎல்-ல் வெறும் 20 லட்சம் தான். ஆனா டிஎன்பிஎல்-ல் அதை விட அதிகமான விலைக்கு எடுக்கப்பட்ட சாய் சுதர்சன். அப்போ இந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் தான்.

-Advertisement-

தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 வயது கிரிக்கெட் வீரரான சாய் சுதர்சன் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த 16-வது ஐபிஎல் தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து இருந்தார். தமிழக வீரரான இவர் கடந்த ஆண்டு முதலே குஜராத் அணியில் விளையாடி வந்தாலும் இந்த ஆண்டு கேன் வில்லியம்சனுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அதிக வாய்ப்புகளை பெற்று விளையாடினார்.

அப்படி தனக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் பலரது மத்தியிலும் பாராட்டுகளையும் பெற்றார். அதோடு அவரது இந்த திறனை கண்ட குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியாவும் அவருக்கு தொடர்ச்சியாக அணியில் இடம் வழங்கியும் வந்தார்.

அதிலும் குறிப்பாக அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற 16-ஆவது ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய அவர் அழுத்தமான அந்த மிகப்பெரிய போட்டியில் அற்புதமாக விளையாடி 47 பந்துகளில் 96 ரன்களை குவித்து அசத்தியிருந்தார்.

ஐபிஎல் தொடரில் 20 லட்ச ரூபாய் என்கிற அடிப்படை விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட சாய் சுதர்சனுக்கு இந்த ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எல் ஏலத்தில் அவரை ஏலத்தில் எடுக்க பெரிய போட்டியே நடந்தது. இறுதியில் ஐபிஎல் தொடரை விட அதிகமான தொகைக்கு அவர் டி.என்.பி.எல் ஏலம் போனார். ஐ.பி.எல் தொடரில் 20 லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்ட அவர் டி.என்.பி.எல் ஏலத்தில் 21 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் என்கிற அளவிற்கு ஏலம் போனார்.

-Advertisement-

இதையும் படிக்கலாமே: வீடியோ: திடீரென அமெரிக்க ரோட்டில் நின்று நமாஸ் செய்த பாக்கிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான். இதெல்லாம் வெறும் வீண் விளம்பரம் என விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்.

இதன் காரணமாக ஐபிஎல் தொடரை விட அவரது டிஎன்பிஎல் ஏலத்தின் மதிப்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. சாய் சுதர்சன் குறித்து பிரபல தமிழக கிரிக்கெட்டரான பத்ரிநாத் கூட அவரது ட்விட்டர் பக்கத்தில் : “நீங்கள் 20 லட்சம் ரூபாய் என்கிற அடிப்படை விலைக்கு சாய் சுதர்சனை ஏலத்தில் எடுத்திருக்கலாம்”, ஆனால் அவரது திறமை விலைமதிப்பற்றது என்று பாராட்டி இருந்தார. சாய் சுதர்சன் இந்த ஆண்டு டிஎன்பிஎல்-ல் லைகா கோவை கிங்ஸ் அணிக்காக விளையடா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்