- Advertisement -
Homeவிளையாட்டுஇந்தியாவ தோக்கடிச்சது இப்படி தான்.. ரகசியம் உடைக்கும் தெ.ஆ கேப்டன் மார்க்ரம்.. அப்ப அடுத்த மேட்சும்...

இந்தியாவ தோக்கடிச்சது இப்படி தான்.. ரகசியம் உடைக்கும் தெ.ஆ கேப்டன் மார்க்ரம்.. அப்ப அடுத்த மேட்சும் ஆப்பு இருக்கு..

- Advertisement-

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடந்த 2 வது டி 20 போட்டியில், தென்னாப்பிரிக்க அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரன் சேர்க்க திணறியது. இந்தியாவில் இளம் வீரர்களை வைத்து ஆஸ்திரேலிய டி 20 தொடரை சூர்யகுமார் யாதவ் கேப்டன்சி தலைமையில் வென்றிருந்தாலும், வெளிநாட்டு மண்ணில் இளம் வீரர்களை கொண்டு டி 20 தொடரை ஆடுவது சவாலாக இருக்கும் என கருதப்பட்டது.

அந்த வகையில் இந்திய அணியின் தொடக்கம் இருந்தது. ஆனாலும், ரிங்கு சிங் மற்றும் சூர்யகுமார் யாதவின் அதிரடி, இந்திய அணிக்கு சிறந்த ஸ்கோரை சேர்க்க உதவியது. இருவரும் அரைசதம் கடந்து அசத்தி இருந்த சூழலில், இந்திய அணியின் இன்னிங்ஸ் முடிவதற்குள் மழை குறுக்கிட்டதால் போட்டி அப்போதே நிறுத்தப்பட்டது. சரியாக 3 பந்துகள் மீதமிருக்க, இந்திய அணி 180 ரன்கள் எடுத்திருந்தது.

மேலும் தொடர்ந்து மழை குறுக்கிட்டதன் காரணமாக, இந்திய அணியின் இன்னிங்ஸ் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட, மேலும் தென்னாப்பிரிக்க அணிக்கு டக்வொர்த் லீவிஸ் படி, 15 ஓவர்களில் 152 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடி ரன் குவித்த தென்னாப்பிரிக்க அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சுக்கு நூறாக்கியது. முதல் இரண்டு ஓவர்களிலேயே 34 ரன்களை தெனாப்பிரிக்க அணி சேர்த்ததால், அவர்களின் வெற்றி வாய்ப்பும் பிரகாசமானது.

கடைசி கட்டத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்று சிறிய விறுவிறுப்பு உருவான போதும் அதற்கான இடம் கொடுக்காமல், தென்னாப்பிரிக்க அணி இலக்கை எட்டி தொடரையும் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றனர்.

- Advertisement-

இந்த நிலையில் தங்களின் அதிரடி வெற்றிக்கு பின்னர் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் அதற்கான காரணம் பற்றி பேசியுள்ளார். “முதல் டி 20 போட்டி நடைபெற இருந்த டர்பனில் மழை பெய்தது ஏமாற்றமாக இருந்தது. இந்த போட்டியில் அதிகம் ரசிகர்கள் மத்தியில் நன்றாக ஆடியது ஒரு சிறப்பான தருணமாக அமைந்தது. ரீசா ஹென்ரிக்ஸ் அற்புதமாக பேட்டிங் செய்தார். அவர் தனது பேட்டிங்கில் ஒரு கேப்டனுக்கான பங்கை எடுத்துக் கொண்டு ஆடினார்.

உலக கோப்பை அணிக்கான வீரர்களை நீங்கள் அடுத்து தேர்வு செய்ய வேண்டும். அதற்காக இன்னும் ஓரிரு இடங்களே பாக்கி உள்ளது. அதற்காக அனைத்து வீரர்களும் கடுமையாக உழைத்து வருகின்றனர். இந்த ஆரோக்கியமான போட்டி எங்களுக்கு முக்கியமான ஒன்று” என தெரிவித்துள்ளார்.

சற்று முன்