- Advertisement 3-
Homeவிளையாட்டுஒத்த காசு வாங்கல.. உலக கோப்பையில் ஆப்கானிஸ்தான் ஜொலிக்க.. முன்னாள் இந்திய வீரர் செஞ்ச விஷயம்..

ஒத்த காசு வாங்கல.. உலக கோப்பையில் ஆப்கானிஸ்தான் ஜொலிக்க.. முன்னாள் இந்திய வீரர் செஞ்ச விஷயம்..

- Advertisement 1-

பொதுவாக ஒரு ஐசிசி தொடர் என வரும் போது கத்துக்குட்டி அணிகள் என அறியப்படும் சிறிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறுவார்கள் என்ற விஷயம் தான் வழக்கமாக இருந்து வந்தது. அதனை ஒரு சில முக்கியமான உலக கோப்பைத் தொடர்களில் வங்காளதேச அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறி கத்துக்குட்டி அணிகள் என்ற பெயரை கொஞ்சம் உடைத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது அந்த வரிசையில் முக்கியமான இடத்தில் இருக்கும் அணி தான் ஆப்கானிஸ்தான். இவர்கள் பெரும்பாலும் கிரிக்கெட் போட்டிகள் ஆட தொடங்கிய போது, ரஷீத் கான், நபி உள்ளிட்ட ஒரு சில வீரர்கள் தான் சர்வதேச தரத்துடன் விளங்கி வந்தாலும் தற்போது அனைவருமே மிரட்டலான பெர்ஃபார்மன்ஸை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது நடைபெற்று வரும் டி 20 உலக கோப்பைத் தொடரில் நியூசிலாந்து அணியை 75 ரன்களுக்குள் சுருட்டி தொடர் வெற்றிகளால் சூப்பர் 8 சுற்றுக்கும் முன்னேறி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருந்தது. நிச்சயம் சூப்பர் 8 சுற்றிலும் ஆப்கானிஸ்தான் அணி எதிரணியினருக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவார்கள் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, கடந்த 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் வைத்து நடந்த உலக கோப்பைத் தொடரிலும் கூட, இந்தியா, தென்னாபிரிக்கா உள்ளிட்ட அணிகளுடன் அரையிறுதி சுற்றிற்கு முன்னேறி இருக்க வேண்டிய அணிகளில் ஒன்றாக தான் திகழ்ந்து வந்தது ஆப்கானிஸ்தான். பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை உள்ளிட்ட அணிகளை வீழ்த்தி இருந்த ஆப்கானிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறும் வாய்ப்பு இருந்த போதும் நூலிழையில் அதனை தவற விட்டதால் அரையிறுதி வாய்ப்பை
இழந்திருந்தது.

- Advertisement 2-

முன்னதாக இந்தியாவில் வைத்து ஒரு நாள் உலக கோப்பைத் தொடர் நடந்ததால் இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா அவர்களின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் செய்த பெருந்தன்மை ஒன்றை பற்றி தற்போது சில தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி, அஜய் ஜடேஜா பற்றி பேசிய கருத்தின் படி, அவர்களின் ஆலோசகராக இருந்தததற்கு பணமே வாங்காமல் இருந்துள்ளார். அவர்கள் பிடிவாதமாக பணம் வாங்க கேட்டுக் கொண்ட பிறகும் கூட, நீங்கள் வெற்றி பெறுவதே எனக்கு நீங்கள் தரக்கூடிய பணம் என்றும் அது தான் எனக்கு நீங்கள் தரும் பரிசு என்றும் அஜய் ஜடேஜா கூறியுள்ளார்.

ஒரு அணியின் நலனுக்காக வேறு அணி என்றும் கூட பாராமல் அஜய் ஜடேஜா செய்த இந்த உதவி பலரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

சற்று முன்