- Advertisement -
Homeவிளையாட்டுபிக் பாஸ்ஸில் பங்கேற்க போகும் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர். அப்போ நிகழ்ச்சியில பல சுவாரசியம்...

பிக் பாஸ்ஸில் பங்கேற்க போகும் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர். அப்போ நிகழ்ச்சியில பல சுவாரசியம் இருக்கும் போலயே.

- Advertisement-

தொலைக்காட்சியை பொறுத்தவரை பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ஒரு நிகழ்ச்சியாக பார்க்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் ஹிந்தியில் மட்டுமே இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. ஆனால் சில வருடங்களுக்கு முன் தமிழிலும் மற்ற தென்னிதியை மொழிகளிலும் ஒளிபரப்பாகி நேர்மறை எதிர்மறை என இருவகையான விமர்சனங்களையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான அஜய் ஜடேஜா பிக் பாஸ் OTT நிகழ்ச்சியில் பேனலிஸ்ட்டாக பங்கு பெறப் போகிறார் என்பதுதான் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை தூண்டி உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவது போல் ஓடிடிட்டுக்கென்று பிரத்தியேகமான ஒரு பிக் பாஸும் ஹிந்தியில் தற்போது கடந்த வருடம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த பிக் பாஸ் ஓடிடியின் முதல் சீசனை கரண் ஜோஹர் தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் இரண்டாவது சீசனை சல்மான்கான் தொகுத்து வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சி ஜூன் 17ஆம் தேதி முதல் துவங்க இருக்கிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் பேனலில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்ற விவரம் தற்போது வெளியாகி உள்ளது.

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரான அஜய் ஜடேஜா இதுவரை 15 டெஸ்ட் போட்டிகளிலும் 196 ஒரு நாள் போட்டிகளிலும் இந்தியாவிற்காக விளையாடி உள்ளார். அவர் இந்த பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் ஒரு பேனலிஸ்டாக கலந்து கொள்ள உள்ளார். இவரை தவிர்த்து சன்னி லியோன், செய்தி வர்ணனையாளர் திபாகர், நடிகர் சந்திப் சிக்கன்ட் உள்ளிட்டோர் இதில் பேனலிஸ்டாக கலந்து கொள்ள உள்ளனர்.

- Advertisement-

இதுகுறித்து அஜய் ஜடேஜா கூறுகையில் இந்த நிகழ்ச்சியில் பேனலிஸ்டாக பங்கேற்பது எனக்கு மிகவும் ஆர்வமாக உள்ளது. இதன் மூலம் இளம் தலைமுறையினரோடு உரையாடும் வாய்ப்பு எனக்கு நிறையவே கிடைக்கும். இது எனக்கு நிச்சயம் ஒரு புதுவிதமான அனுபவமாக இருக்கும். இது ஒரு விளையாட்டு என்றாலும் கிரிக்கெட் போன்றது இல்லை. ஒட்டுமொத்த தேசமும் இந்த நிகழ்ச்சியின் மூலம் நம்மை உற்று நோக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

இதையும் படிக்கலாமே: தோனியோடு ருத்துராஜை ஒப்பிட்டு சூசகமாக பேசிய ரெய்னா. ஒருவேளை அவர் இத தான் மறைமுகமா சொல்ல வராரோ என யூகிக்கும் நெட்டிசன்ஸ்

பிக் பாஸ் ஓடிடி-யை பொறுத்தவரை அந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களை கேள்வி கேட்பதே பேனலிஸ்ட்டின் வேலையாக இருக்கும். அந்த நிகழ்ச்சியில் யார் யாரெல்லாம் போட்டியாளர்களாக பங்குபெற போகிறார்கள் என்ற முழு விவரம் இன்னும் வெளியாக வில்லை. ஆனாலும் பல பிரபலங்களின் பெயர்கள் அதில் அடிபடுவது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்