- Advertisement -
Homeவிளையாட்டுவிரலில் ஏற்பட்ட காயம், ஸ்கேன் செய்யலாம் என்ற டாக்டர். அணி தான் முக்கியம் என களத்திலேயே...

விரலில் ஏற்பட்ட காயம், ஸ்கேன் செய்யலாம் என்ற டாக்டர். அணி தான் முக்கியம் என களத்திலேயே நின்று விளையாடிய ரகானே – நெகிழ்ச்சியில் அவர் மனைவி வெளியிட்ட பதிவு

- Advertisement-

இங்கிலாந்து லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 7-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியானது தற்போது நான்காவது நாளை எட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ள வேளையில் இந்திய அணி சற்று பின்னடைவை சந்தித்துள்ளது என்றே கூறலாம்.

ஏனெனில் இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 469 ரன்களை குவிக்க அடுத்து விளையாடிய இந்திய அணியானது 296 ரன்களை மட்டுமே குவித்தது. அதன் பிறகு ஆட்டத்தை துவங்கிய ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் அடித்து டிக்ளர் செய்தது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி மிக மோசமான சரிவை நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில் அஜின்க்யா ரஹானே அணியை தூக்கி நிறுத்தினார் என்றே கூறலாம். ஏனெனில் முதல் இன்னிங்ஸில் 89 ரன்களை அடித்த அவர் இந்திய வீரர்களில் அதிகபட்ச ரன்களை பதிவு செய்தார்.

அது மட்டுமின்றி ஷர்துல் தாகூருடன் ஏழாவது விக்கெட்டுக்கு 109 என்று பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு டீசன்டான ரன் குவிப்பை நோக்கியும் அழைத்துச் சென்றார். இறுதியில் 129 பந்துகளை சந்தித்த அவர் 11 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 89 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்நிலையில் இந்த முதல் இன்னிங்ஸ்சின் போது பேட் கம்மின்ஸ் வீசிய ஒரு பந்தில் வலது கை விரலில் காயம் அடைந்த ரஹானே வலியால் துடித்தார்.

- Advertisement-

அப்போது களத்திற்கு வந்த டாக்டரும் அவரது விரலை பார்த்துவிட்டு ஸ்கேன் செய்யலாமா? என்று கேட்டார். ஆனால் அணியின் இக்கட்டான நிலையை கருதி களத்தில் இருந்து வெளியேறாத ரஹானே வலியுடன் டேப் போட்டுக் கொண்டு அந்த முதல் இன்னிங்க்ஸை விளையாடி முடித்தார். இந்நிலையில் ரகானேவின் இந்த அர்ப்பணிப்பை கண்ட அவரது மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு கருத்தில்:

இதையும் படிக்கலாமே: சாதித்து காட்டிய நட்டு. திறப்பு விழாவுக்கு தயாரான நடராஜன் கிரிக்கெட் மைதானம். இந்த பிரபல வீரர் தான் திறக்கப்போகிறார்.

உங்களது விரல் வீங்கி இருந்தாலும் ஸ்கேனை தவிர்த்து நீங்கள் விளையாட வேண்டும் என்று நினைத்த உங்களது சுயநலமற்ற எண்ணம் மற்றும் இந்த போட்டியின் மீது நீங்கள் வைத்திருக்கும் கமிட்மெண்ட் இந்த விடயத்தில் தெரிந்தது. நீங்கள் களத்தில் நின்று அணிக்காக விளையாட வேண்டும் என்று நினைக்கிறீர்கள். எப்போதுமே ஒரு வீரராக நீங்கள் அணிக்காக கொடுக்கும் அர்ப்பணிப்பை நினைத்து நான் பெருமை அடைகிறேன் என்ற ஒரு கருத்தினை அவர் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்