இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியானது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இன்றைய நாள் முடிவில் வெற்றி பெறப்போவது யார் என்ற விவரம் தெரியவரும். 444 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு நேற்று இந்திய அணி தனது ஆட்டத்தை துவங்கி உள்ளது.
துவக்க வீரர்களான கில்லும், ரோகித் ஷர்மாவும் நல்ல ஒரு துவக்கத்தை ஆரம்பத்தில் கொடுத்தாலும், கில் க்ரீனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆன பிறகு ஆட்டம் தொய்வு பெற்றது என்றே கூறலாம். அதே வேலையில் கில்லின் அவுட் தற்போதுவரை பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளதும் குறிப்பிட தக்கது.
இது ஒருபுறம் இருக்க, அஜிங்க்யா ரஹானேவை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தேர்வு செய்தது குறித்து ஆரம்பத்தில் பல்வேறு கேள்விகள் எழுப்பட்டன. இருப்பினும் ஐபிஎல் 2023-இல் அவரின் பார்ம் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவரின் பெயர் இடம் பெற ஒரு முக்கிய பங்காற்றியது என்றே கூறலாம்.
அதே சமயம் தனது பணியை இந்த போட்டியில் ரஹானே தற்போது வரை சிறப்பாக செய்து வருகிறார் என்றே கூறலாம். முதல் இன்னிங்க்ஸை பொறுத்தவரை 129 பந்துகளை சந்தித்த அவர் 89 ரன்களில் ஆட்டம் இழந்தார். அதில் பேட் கம்மின்ஸ் வீசிய பந்தில் அவர் கேமரன் கிரீனிடம் கேட்ச் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இரண்டாவது இன்னிங்சில் விராட் கோலியோடு ஜோடி சேர்ந்து ஆடி வருகிறார்.
நேற்றைய நாள் முடிந்த போது அவர், 59 பந்துகளை சந்தித்து 20 ரன்களை எடுத்திருந்தார். மறுபுறம் விராட் கோலி தனது அதிரடியான ஆட்டத்தை ஆடி வருகிறார். அவர் 60 பந்துகளை சந்தித்து அதில் 44 ரன்களை எடுத்துள்ளார்.
இதையும் படிக்கலாமே: சுப்மன் கில் அவுட் விவகாரம். ஐசிசி விதி சொல்வது என்ன? அவர் அவுட்டா இல்லையா? முழுமையான தகவல்
இந்த நிலையில், மூன்றாம் நாள் போட்டி முடிந்த பிறகு, முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் ரஹானேவிடம், உங்கள் ஆட்டத்தில் சிஎஸ்கே-வின் தாக்கம் இருந்ததா என கேட்டார். அதற்க்கு ரஹானே, நிச்சயமாக இருந்தது, CSK அணியில் இருந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என கூறினார். அதே போல ரவி சாஸ்திரியும் ஐபிஎல்-இல் சென்னை அணிக்காக ரஹானே ஆடிய சிறப்பான ஆட்டம் அவருக்கு கம்பேக் கொடுக்க உதவியது என குறிப்பிட்டார்.