- Advertisement -
Homeவிளையாட்டுஉலகக்கோப்பை இந்திய அணி: சஞ்சு சாம்சன், திலக் வர்மா அவுட்.. இஷான் கிஷன் இன்.. கேஎல்...

உலகக்கோப்பை இந்திய அணி: சஞ்சு சாம்சன், திலக் வர்மா அவுட்.. இஷான் கிஷன் இன்.. கேஎல் ராகுலுக்கு வாய்ப்பு.. அதிரடியாக நடந்த கலந்தாய்வு…

- Advertisement-

உலகக்கோப்பைக்கான இந்திய அணியை இன்னும் சில நாட்களில் அறிவிக்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் இருப்பதால் நேற்று அது குறித்த ஒரு முக்கியமான நிகழ்வு நடந்துள்ளது. பிசிசிஐ செலக்சன் கமிட்டி நேற்று இரவு 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை உலகக்கோப்பைக்காக தேர்வு செய்து உள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியின் படி,

தேர்வு குழு தலைவர் அஜித் அகர்க்கர் இலங்கை சென்று அங்கு ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட்டை சந்தித்து அணிகுறித்து விவாதித்ததாகவும் 15 வீரர்கள் கொண்ட அணியை தேர்வு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நேற்று இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி நடந்து முடிந்த பிறகு தான் இந்தத் தேர்வானது இறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இப்படி தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணியில், தற்போது ஆசிய கோப்பைக்காக இலங்கையில் உள்ள சஞ்சு சாம்சன், திலக் வர்மா, பிரசித் கிருஷ்ணா போன்ற வீரர்கள் இடம்பெறவில்லை என்றும், அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன் இந்த ஸ்குவாடில் இடம்பெற்றுள்ளதாகவும், சுப்மேன் கில் , விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், சூரியகுமார் யாதவ் போன்ற பேட்ஸ்மேன்கள் அணியில் உள்ளதாகவும், ஆல் ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

- Advertisement-

பௌலிங்கை பொறுத்த வரை பும்ரா, ஷமி, சிராஜ் போன்ற வேக பந்துவீச்சாளர்களும், ஸ்பின்னராக குல்தீப் யாதவும் இடம் பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதே போன்று தேர்வுக்குழு கேஎல் ராகுல் குறித்த உடன் தகுதியை விவாதித்ததாகவும் மருத்துவக் குழு கிரீன் சிக்னல் கொடுத்துள்ளதால் அவரும் அணியில் இடம்பெற்றுள்ளதாகும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேஎல் ராகுல் தற்போது நல்ல உடல் தகுதியோடு இருப்பதால் அவர் விரைவில் இலங்கை சென்று ஆசிய கோப்பையில் பங்கு பெறுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் இந்திய அணி குறித்த விவரங்களை ஐசிசி இடம் தெரிவிக்க வேண்டும் என்ற நிலையில் கேஎல் ராகுலின் உடல் தகுதிக்காகவே தாமதம் ஏற்பட்டதாகவும் தற்போது அவர் பிட்டாக உள்ளதால் இனியும் தாமதிக்க வேண்டாம் என்று இந்த கலந்தாய்வு நடத்தப்பட்டதாகவும் அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சற்று முன்