- Advertisement -
Homeவிளையாட்டுதோனி டி20 போட்டிக்கு சரி பட்டு வரமாட்டார். அவரை கழட்டி விடுவது தான் அணிக்கு நல்லது....

தோனி டி20 போட்டிக்கு சரி பட்டு வரமாட்டார். அவரை கழட்டி விடுவது தான் அணிக்கு நல்லது. வைரலாகும் அஜித் அகார்கரின் பழைய கருத்து

- Advertisement-

இந்திய அணிக்கான புதிய தேர்வுக்குழு தலைவர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தற்போது பிசிசிஐ அறிவித்துள்ளது. இதையடுத்து அந்த பதவிக்கு விண்ணப்பித்துள்ள அஜித் அகார்கர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்காக அவர் ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் வகித்து வந்த பொறுப்பை துறந்துள்ளார்.

அஜித் அகார்கர் 2013 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன்பின்னர் பல அணிகளுக்கு சப்போர்ட் ஊழியராக பணியாற்றியுள்ளார். அகார்கர் 2007 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி டி20 கோப்பையை வென்ற அணியில் இடம்பிடித்திருந்தார்.

இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு தோனி தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதிகாலத்தில் இருந்த போது அவர் பற்றி அஜித் அகார்கர் சொன்ன விமர்சனங்கள் இப்போது கவனம் பெற்றுள்ளன. 2017 ஆம் ஆண்டு அவர் “தோனியைத் தாண்டி வேறு நபருக்கு இந்திய அணி தயாராக வேண்டும். குறைந்த பட்சம் டி20 போட்டிகளில் மட்டுமாவது அபப்டி இருக்க வேண்டும்.

ஒருநாள் கிரிக்கெட்டில் அவரின் ஆட்டம் திருப்தி அளிக்கும் விதமாக உள்ளது. தோனி கேப்டனாக இருந்தபோது பரவாயில்லை. ஆனால் வெறும் வீரராக இந்தியா அவரை மிஸ் செய்யாது என நினைக்கிறேன்.  டி20 கிரிக்கெட்டில் இப்போது அவரது இடத்துக்கு மாற்றத்துக்கான தேவை இருப்பதாகவும், அது எளிதானது என்றும் நான் நினைக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

- Advertisement-

அவர் சொல்லி ஒரு வருடம் கழித்து 2018 ஆம் ஆண்டு தோனி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் கழட்டிவிடப்பட்டார்.  அப்போதும் இதே போன்ற கருத்தை அகார்கர் கூறினார். அதில் “தேர்வாளர்களின் இந்த முடிவு சரியானது என்று நினைக்கிறேன். இந்திய அணிக்கு அடுத்த டி20 உலகக் கோப்பை தொடர் 2020 ஆம் ஆண்டு வர உள்ளது. அதுவரை தோனி சர்வதேச போட்டிகளில் விளையாடுவாரா என தெரியவில்லை.

அவரின் சமீபத்தைய பேட்டிங் டி20 போட்டிகளுக்கு ஏற்றவாறு திருப்தியளிக்கும் படி இல்லை.  நீங்கள் எப்போதும் முன்னோக்கி நகரவேண்டும்” எனக் கூறியிருந்தார். இப்போது அகார்கர் தேர்வுக்குழு தலைவராக உள்ள நிலையில் அவரின் இந்த கமெண்ட்கள் இணையத்தில் மீண்டும் கவனம் பெற்றுள்ளன.

சற்று முன்