- Advertisement 3-
Homeவிளையாட்டுமுத்தான 3 விக்கெட்.. மேட்ச்லயே இல்லாத பும்ரா உதவியால் ஆகாஷ் தீப் சாதிச்சது எப்படி..

முத்தான 3 விக்கெட்.. மேட்ச்லயே இல்லாத பும்ரா உதவியால் ஆகாஷ் தீப் சாதிச்சது எப்படி..

- Advertisement 1-

தான் களம் இறங்கிய முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், அதுமட்டுமில்லாமல் முதல் ஸ்பெல்லிலேயே மூன்று விக்கெட்டுகளைப் கைப்பற்றி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் இந்திய அணியின் புதிய அறிமுக பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப். அடுத்தடுத்து இந்திய அணிக்காக அறிமுகமாகி வரும் இளம் வீரர்கள் மிக அதிரடியான பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

அந்த வரிசையில் இணைந்துள்ள ஆகாஷ் தீப், தன்னுடைய சர்வதேச தொடக்கத்தை மிக அருமையாக தொடங்கியுள்ளதால் இனி வரும் டெஸ்ட் போட்டியிலும் அவரது தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து அணிக்காக இந்த டெஸ்ட் தொடரில் கலக்கி வரும் சாக் கிரவுலி, பென் டக்கட் மற்றும் ஒல்லி பாப் ஆகியோரின் விக்கெட்டை ஆகாஷ் கைப்பற்றி இருந்தது, இங்கிலாந்து அணிக்கு பெரிய அதிர்ச்சியாக தான் இருந்திருக்கும்.

முன்னதாக இவர் சாக் கிரவுலியின் விக்கெட்டை எடுத்திருந்தாலும், அது நோ பால் என அறிவிக்கப்பட்டிருருந்தது. அதன் பின்னர், அதை நினைத்து துவண்டு போகாமல் திரும்பி வந்த ஆகாஷ் தீப், அவரது விக்கெட் உட்பட மொத்தம் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இந்நிலையில், இது பற்றி முதல் நாள் போட்டிக்கு பின்னர் பேசிய ஆகாஷ் தீப், “அது நோ பால் என சொன்னதும் நான் ஏமாற்றம் அடைந்தேன். அது எனது முதல் சர்வதேச விக்கெட் பறிபோய்விட்டது என்பதற்காக அல்ல. அதன் பின்னர் அவர்கள் சிறப்பாக ஆடி ரன் எடுக்க தொடங்கி விட்டனர் என்பதால் தான்.

அவர்கள் எளிதாக ரன் எடுக்கத் தொடங்கி விட்டதால், என்னால் தான் அவர்கள் இப்படி ரன் எடுக்க தொடங்கி விட்டார்கள் என நான் மிகவும் வருத்தம் அடைந்தேன்” என தெரிவித்துள்ளார். அதே போல, தான் 3 விக்கெட்டுகள் எடுக்க பும்ரா கொடுத்த அறிவுரையும் ஒரு காரணம் என ஆகாஷ் தீப் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement 2-

“உள்ளூர் கிரிக்கெட்டில் எங்களுடைய லென்த் சற்று ஃபுல்லாக இருக்கும். ஆனால் சர்வதேச போட்டியில் பயிற்சியாளர்களும், ரோஹித் ஷர்மா மற்றும் பும்ரா உள்ளிட்டோரும் என்னிடம் சர்வதேச போட்டிகளில் ஷார்ட் பந்துகளை கொஞ்சம் பின்னோக்கி வீசும்படி அறிவுறுத்தினார்கள். இதனால், என்னுடைய லைன் மற்றும் லென்த்தில் அவர்கள் சொன்னது போல திட்டம் போட்டு பந்துகள் வீசினேன்” என கூறி உள்ளார்.

ஆகாஷ் தீப் எடுத்த 3 விக்கெட்டுகளில் 2 விக்கெட்டுகள் பும்ரா கொடுத்த அறிவுரையின் பேரில் பந்து வீசி கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்