- Advertisement 3-
Homeவிளையாட்டுஇளம் வீரர் ஆகாஷுக்காக ரோஹித் செஞ்ச விஷயம்.. கலங்கி நின்ற மைதானம்.. நீ தான்யா கேப்டன்..

இளம் வீரர் ஆகாஷுக்காக ரோஹித் செஞ்ச விஷயம்.. கலங்கி நின்ற மைதானம்.. நீ தான்யா கேப்டன்..

- Advertisement 1-

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதி வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இங்கிலாந்தின் முன்னணி வீரர் ஜோ ரூட் சதமடித்து அசத்தியுள்ளார். அவர் சதம் அடித்தது இங்கிலாந்து அணிக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்பட்டாலும் முதலில் வீரர்கள் ரன் எடுக்க தட்டுத் தடுமாறினார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

இரண்டு தோல்விகளை சந்தித்துள்ள இங்கிலாந்து அணி, மீதமுள்ள இரண்டில் ஒரு தோல்வியை சந்தித்தால் கூட தொடரை இழக்க நேரிடும் என்ற நிலையில் தான் நான்காவது டெஸ்டில் இந்திய அணியை அவர்கள் எதிர் கொண்டனர். அதன்படி டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

முந்தைய தோல்விகளால் துவண்டு போன இங்கிலாந்து அணி, இந்த முறை சிராஜ், அஸ்வின், ஜடேஜா உள்ளிட்ட பந்து வீச்சாளர்களை சமாளிக்க திட்டங்கள் வகுத்து களமிறங்கியது. ஆனால் முதல் டெஸ்டில் களமிறங்கிய ஆகாஷ் தீப், ஜாக் கிரவுலி, பென் டக்கட், ஒல்லி போப் என முதல் மூன்று விக்கெட்டுகளை அசால்ட்டாக தட்டித் தூக்கி இருந்தார்.

இதனை கொஞ்சமும் எதிர்பாராத இங்கிலாந்து வீரர்களை போல, இந்திய ரசிகர்களும் கூட ஒரு நிமிடம் வாயடைத்து தான் போனார்கள். இந்திய அணிக்காக சமீபத்திய தொடர்களிலும் சில இளம் வீரர்கள் தங்களின் தடம் பதித்து வருங்கால இந்திய அணியின் தூண்களாகவும் மாற முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இந்த தொடரில் சர்பராஸ் கான், துருவ் ஜூரேல், ஜெய்ஸ்வால் உள்ளிட்ட வீரர்கள் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பட்டையை கிளப்பி வருகின்றனர்.

- Advertisement 2-

அப்படி ஒரு சூழலில் இந்த லிஸ்ட்டில் புதிதாக சேர்ந்துள்ளார் மற்றொரு இளம் வீரர் ஆகாஷ் தீப். முதல் இன்னிங்சை போல இரண்டாவது இன்னிங்சிலும் இந்திய அணிக்காக இங்கிலாந்தின் விக்கெட்டுகளை ஆகாஷ் தீப் காலி செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வறுமையான குடும்பத்தில் இருந்து பல்வேறு தடைகளை தாண்டி, ரஞ்சி கோப்பை, ஐபிஎல் தொடர் ஆகியவற்றில் சிறப்பாக ஆடி இந்திய அணியிலும் இடம் பிடித்துள்ள ஆகாஷ் தீப், இந்திய அணியின் வருங்கால வேகப்பந்து வீச்சிற்கு துருப்புச் சீட்டாக இருப்பார் என்றும் கருதப்படுகிறது.

இந்த நிலையில், கால் பதித்த போட்டியிலேயே முதல் 3 விக்கெட்டுகளை எடுத்த ஆகாஷ் தீப்பிற்காக இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா செய்த விஷயம், ரசிகர்களை மனம் நெகிழ வைத்துள்ளது. மதிய உணவிற்கு முன்பாக மூன்று விக்கெட்டுகளை ஆகாஷ் எடுத்திருந்த நிலையில், இடைவேளைக்காக இந்திய வீரர்கள் மைதானத்தில் இருந்து வெளியேறினர்.

அப்போது, ஆகாஷ் தீப்பை ரோஹித் ஷர்மா முன்னால் நடக்க வைக்க, மற்ற வீரர்கள் அவரை பின் தொடர்ந்து சென்றனர். இளம் வீரருக்காக ரோஹித் எடுத்த இந்த முன்னெடுப்பு, பலரையும் மனம் கவர்ந்துள்ளது.

சற்று முன்