- Advertisement 3-
Homeவிளையாட்டுஇப்படி தான் விக்கெட் எடுப்பீங்களா.. சாதனை நாயகன் அஸ்வினை சல்லி சல்லியா நொறுக்கிய குக்..

இப்படி தான் விக்கெட் எடுப்பீங்களா.. சாதனை நாயகன் அஸ்வினை சல்லி சல்லியா நொறுக்கிய குக்..

- Advertisement 1-

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் மிக முக்கியமான வீரராக கால் பதித்து வருபவர் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய அணிக்காக மிகப்பெரிய பங்காற்றி வரும் சூழலில் சமீபத்தில் மிக முக்கியமான ஒரு மைல்கல்லையும் எட்டி சாதனை புரிந்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்து வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தொடக்க வீரர் சாக் கிராவ்லி விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தி இருந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 500-வது விக்கெட்டாகவும் மாறி இருந்தது.

இந்திய அணி சார்பில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை அணில் கும்ப்ளேவிற்கு பிறகு எடுத்த பந்து வீச்சாளர் என்ற சிறப்பை அஸ்வின் பெற்றுள்ளார். அது மட்டுமில்லாமல் 800 விக்கெட்டுகளை டெஸ்ட் போட்டிகளில் எடுத்துள்ள முத்தையா முரளிதரனிற்கு பிறகு அதிவேகமாக 500 விக்கெட்டுகளை டெஸ்டில் எடுத்த வீரர் என்ற சிறப்பையும் வார்னே, அணில் கும்ப்ளே உள்ளிட்டோரை முந்தி செய்து சாதனை படைத்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக அணில் கும்ப்ளே 619 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அவரது சாதனையை விரைவில் அஸ்வின் கடந்து அதிக விக்கெட்டுகள் எடுத்த நம்பர் 1 இந்திய வீரராகவும் அவர் உருவெடுப்பார் என்றும் தெரிகிறது. மேலும் ஐநூறு விக்கெட்டுகளை தொட்ட அஸ்வினின் சாதனைக்கு சச்சின் டெண்டுல்கர் தொடங்கி ஏராளமான கிரிக்கெட் பிரபலங்கள் அவரை வாழ்த்தி வரும் அதே வேளையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலைஸ்டர் குக், சில விமர்சன கருத்துக்களை முன் வைத்துள்ளார்.

இந்திய அணி பேட்டிங் செய்த சமயத்தில் ஆடிக் கொண்டிருந்த ரவிச்சந்திரன் அஸ்வின், ரன் ஓடும்போது பிட்சிற்கு நடுவே ஓடியதாக தெரிகிறது. இது எதிரணியினருக்கு பாதகமாக இருக்கும் என்ற சூழலில் நடுவர் எச்சரித்தது மட்டுமல்லாமல், இந்திய அணிக்கு ஐந்து ரன்கள் பெனாலிட்டியாகவும் அறிவித்திருந்தார். இதனால் இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தொடங்கிய போது அவர்கள் ஐந்து ரன்கள் என்ற கணக்கில் தான் போட்டியை தொடங்கினர்.

- Advertisement 2-

இதனிடையே, அஸ்வின் பிட்ச் நடுவே ஓடியது பற்றி தற்போது பேசி உள்ள அலைஸ்டர் குக், “இது வேண்டுமென்றே அஸ்வின் செய்தாரா என்று கேட்டால் நிச்சயமாக அப்படித்தான் செய்தார். இது அவருடைய தந்திரம் தான். ஏனென்றால் அஸ்வின் பின்னர் பந்துவீச வரும் போது அவருக்கு பிட்ச் சேதமாக இருப்பது மிகப்பெரிய அளவில் விக்கெட்டுகளை எடுக்க உதவி செய்யும்.

இதில் எங்கே ஸ்போர்ட்ஸ் மேன் ஷிப் இருந்தது. அப்படி இல்லை என்றால் அது எங்கே சென்றது?” என அஸ்வினுக்கு எதிராக கேள்வியையும் முன் வைத்துள்ளார். ஊரே பாராட்டி வரும் அஸ்வினை தாறுமாறாகஅலைஸ்டார் குக் விமர்சித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சற்று முன்