தற்போதைய காலத்தில் டி20 போட்டிகளின் வரவுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் முறையும் வெகுவாக மாறியுள்ளது. பேட்ஸ்மேன்கள் வித்தியாசமான ரிவர்ஸ் ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்கூப் உள்ளிட்ட ஷாட்களை டெஸ்ட் போட்டிகளிலும் முயல்கிறார்கள். அதில் சில முறை பவுண்டரிகளையும் சில முறை தங்கள் விக்கெட்களையும் இழக்கின்றனர்.
சமீபத்தில் நடந்துவரும் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் தொடர்ந்து சில ரிவர்ஸ் கூப் ஷாட்களை ஆடியது வினோதமாக பார்க்கப்பட்டது. அதில் சில பந்துகளை அவர் மிஸ் செய்தாலும், சில பந்துகளில் அவருக்கு சிக்ஸர் உட்பட பவுண்டரிகள் கிடைத்தன.
ஆனால் டெஸ்ட் போட்டிகளில் இந்த ஷாட் விளையாடுவதில் மிகப்பெரிய ரிஸ்க் உள்ளது. பலமுறை நீங்கள் உங்கள் விக்கெட்டை இழக்க வேண்டி இருக்கும். அதனால்தான் கோலி, ஸ்டீவ் ஸ்மித், அலஸ்டர் குக் மற்றும் சச்சின், டிராவிட் போன்ற ஆர்த்தடாக்ஸ் வீரர்கள் இதுபோன்ற ஷாட்களை விளையாடுவதில்லை. அதிலும் இப்போது விளையாடும் வீரர்களில் கோலி மற்றும் ஸ்மித் இதில் குறிப்பிடத்தகுந்த வீரர்களாக உள்ளன.
ஆஸி அணியின் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான அலெக்ஸ் கேரி இதுபோன்ற ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்களை தொடர்ந்து ஆடக் கூடியவர். அதன் மூலம் தனது விக்கெட்டை சிலமுறை இழந்துள்ள அவர், நடந்து வரும் ஆஷஸ் தொடரில் கட்டுப்பாட்டுடன் இந்த ஷாட்டை விளையாட முயலவே இல்லை. அதற்குக் காரணம் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் போன்றோரிடம் இருந்து தான் கற்றுக்கொண்ட பாடம்தான் எனக் கூறியுள்ளார்.
ஆஷஸ் தொடரின் முதல் இன்னிங்ஸில் கவாஜாவோடு கூட்டணி அமைத்து அரைசதம் அடித்த கேரி, இதுபற்றி பேசும்போது “முதல் இன்னிங்ஸில் ஓவல் மைதானத்தில் அப்படி விளையாட வேண்டிய அவசியம் இல்லை. விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரும், ரிஸ்க் அதிகம் உள்ள அந்த குறிப்பிட்ட ஷாட்டை ஏன் அடிக்கடி விளையாட முயல்கிறீர்கள் என்று கேட்டார்கள். அவர்களின் இந்த கேள்வியே என்னை கட்டுக்கோப்பாக விளையாட உந்தியது எனக் கூறியுள்ளார்.
மேலும் அவர் “முதல் இன்னிங்ஸில் 50 க்குப் பிறகு நான் பார்த்த வாய்ப்பு பென் டக்கெட் பாய்ண்ட்டில் வந்து நின்றது, அங்கு யாரும் பவுண்டரிக்கு முயலவில்லை. எனக்கு அப்போது சில வாய்ப்புகள் இருப்பதை அறிந்தேன். வேறு இடங்களில் பவுண்டரிகளை அடிப்பதற்கான வாய்ப்புகளை நான் கவனித்தேன்.” எனக் கூறியுள்ளார்.