- Advertisement -
Homeவிளையாட்டுஐஎஎஸ் வேலையே உதறிவிட்டு இந்திய அணிக்காக விளையாடிய பிரபல வீரர். 1999 உலகக் கோப்பையில் கூட...

ஐஎஎஸ் வேலையே உதறிவிட்டு இந்திய அணிக்காக விளையாடிய பிரபல வீரர். 1999 உலகக் கோப்பையில் கூட இவர் இடம் பெற்றிருந்தார்.

- Advertisement-

கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்கள் கனவை அடைவதற்காக கடுமையாக போராடுவது வழக்கம் அதே போல் தான் ஐஏஎஸ் போன்ற உயர் பதவிகளை ஈட்டுவதற்காக பலரும் யுபிஎஸ்சி என்ற தகுதி தேர்வுக்காக கடுமையாக உழைப்பர். ஆனால் அப்படி பட்ட யுபிஎஸ்சி தகுதித் தேர்வில் வெற்றி பெற்றும் அந்த வேலையை வேண்டாம் என உதறிவிட்டு இந்திய அணிக்காக விளையாட வந்த ஒரு வீரர் தான் அமே குராசியா.

1972 ஆம் ஆண்டு பிறந்த இவர் இந்திய அணியின் ஜாம்பவான் வீரர் என போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் உட்பட, சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட், சேவாக் அஜய் ஜடேஜா போன்று வீரர்களோடு இந்திய அணியில் விளையாடி உள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த இவர் தனது 17 வது வயதில் முதல் தர கிரிக்கெட்டில் விளையாட தொடங்கினார்.

இடது கை மடிலாடர் பேட்ஸ்மேனான இவர் 1999இல் ஸ்ரீலங்காவுக்கு எதிரான பெப்சி கோப்பையில் தான் முதன்முதலில் இந்திய அணிக்காக விளையாடினார். ஒருமுறை இவர் 45 பந்துகளில் 57 ரன்கள் அடித்தது நிச்சயம் மறக்க முடியாத ஒரு தருணமாக உள்ளது. ஆனால் இந்திய அணியில் அவரது பயணம் பெரிதாக நீடிக்க வில்லை.

12 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய அவர் 149 ரன்கள் குவித்தார். கடந்து 2001 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக விளையாடிய போட்டி தான் இந்திய அணிக்காக அவரது கடைசி போட்டியாக அமைந்தது. முதல் தர கிரிக்கெட்டை பொருத்தவரை அவர் 1999 போட்டிகளில் விளையாடி 7000 ரன்களுக்கு மேல் குவித்துளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement-

இவர் இந்திய அணியில் இணைவதற்கு முன்பாகவே ஐஎஸ் தகுதித் தேர்வு என்று அழைக்கப்படும் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு முன் மிகப்பெரிய பதவி காத்திருந்தும் அவருடைய கனவு கிரிக்கெட் வீரர் ஆவது என்பது தான். அதனால் அதை நோக்கியே அவர் சென்றார்.

அவர் தற்போது சுங்கம் மற்றும் மத்திய கலால் துறையில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். அதே சமயம் அவர் ஐபிஎல் போட்டிகளுக்கும் இந்திய அணிக்கும் தகுதி பெறும் வரையில் இளம் வீரர்களுக்கு பயிற்சியும் கொடுத்து வருகிறார். ஆர்சிபி அணியின் வீரரான ரஜத் படிதார் எல்எஸ்ஜி அணியின் வீரரான ஆவேஷ் கான் உட்பட சில வீரர்கள் இவரிடம் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்