- Advertisement -
Homeவிளையாட்டுராயுடுவிற்காக வீடியோ வெளியிட்ட சிஎஸ்கே. ரெய்னா போன்றோர் அவரது ஓய்வு அறிவிப்பு குறித்து கூறியிருப்பது என்ன?...

ராயுடுவிற்காக வீடியோ வெளியிட்ட சிஎஸ்கே. ரெய்னா போன்றோர் அவரது ஓய்வு அறிவிப்பு குறித்து கூறியிருப்பது என்ன? அதென்ன “நோ யு டர்ன்” – முழு விவரம்

- Advertisement-

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான அம்பாத்தி ராயுடு, நேற்று தன்னுடைய ஐபிஎல் கிரிக்கெட் ஓய்வை அறிவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் 2010 ஆம் ஆண்டு அறிமுகம் ஆகி இந்திய அணியில் இடம்பிடித்து சில போட்டிகளில் விளையாடியனார் ராயுடு. ஆனால் அவரால் இந்திய அணியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.

நடப்பு சீசனில் சிஎஸ்கே அணிக்காக ராயுடு 15 போட்டிகளில் விளையாடி 139 ரன்கள் எடுத்துள்ளார். இந்த சீசன் அவருக்கு சொல்லிக்கொள்ளும் படி அமையவில்லை. ஆனால் அவர் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிக்காக குறிப்பிடத்தகுந்த பங்களிப்புகளை அவர் செய்துள்ளார். இதுவரை ஐபிஎல் தொடரில் 14 சீசன்களில் விளையாடினார்.

இதுவரை ஐந்து ஐபிஎல் கோப்பைகளை சென்னை மற்றும் மும்பை அணிகளின் சார்பாக  வென்றுள்ளார் (எம்ஐக்கு 3 மற்றும் சிஎஸ்கேக்கு 2). ஆந்திரப் பிரதேசத்தில் பிறந்த ராயுடு இறுதிப் போட்டிக்கு முன்னதாக தனது ஓய்வை அறிவித்தார் மற்றும் அவரது ரசிகர்களின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.

இது சம்மந்தமான அவரின் ட்வீட்டில் “2 சிறந்த அணிகள் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ், 204 போட்டிகள், 14 சீசன்கள், 11 பிளேஆஃப்கள், 8 இறுதிப் போட்டிகள், 5 கோப்பைகள். இன்று இரவு 6வது கோப்பையாக இருக்கலாம். இது ஒரு நல்ல பயணம். இன்று இரவு நடக்கும் இறுதிப் போட்டி ஐபிஎல்லில் எனது கடைசி ஆட்டமாக இருக்கும் என அறிவிக்கிறேன். நான் உண்மையிலேயே ஐபிஎல் போன்ற தொடரை விளையாடியதில் மகிழ்ச்சி அடைகிறேன். அனைவருக்கும் நன்றி. நோ யு டர்ன்” என ட்வீட் செய்திருந்தார்.

- Advertisement-

அம்பாத்தி ராயுடு, 2022 ஐபிஎல் தொடரின் போது தனது ஓய்வை அறிவித்தார். இருப்பினும், அவர் ட்வீட்டை வெளியிட்ட சில நிமிடங்களில் அதை நீக்கிவிட்டு மீண்டும் ஐபிஎல்-ல் தொடர்ந்தார். அதைக் குறிப்பிட்டே இந்த முறை “யு டர்ன்” இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக சர்வதேச போட்டிகளிலும் 2019 ஆம் ஆண்டு அவர் ஓய்வை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பாத்தி ராயுடு ஓய்வை அறிவித்ததை அடுத்து அவருக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அதில் முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா, ராபின் உத்தப்பா, முன்னாள் கிரிகெட்டர் சபா கரீம், அவர் தற்போது விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், அவர் முன்பு விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ஆகியோர் அவரது சிறப்பான கேரியரை குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளனர்.

இதுகுறித்து ரெய்னா போட்ட பதிவில், இனிய ஓய்வுநாள் வாழ்த்துக்கள் சகோதரரே. உங்களுடன் களத்தைப் பகிர்ந்துகொண்டதும், களத்திற்கு வெளியேயும் உங்களைப் பற்றி அறிந்துகொள்வதும் பெருமையாக இருக்கிறது. விளையாட்டிற்கான உங்கள் மகத்தான பங்களிப்புகள் என்றும் மறக்க முடியாத ஒரு அழியாத முத்திரையை போல இருக்கும். நீங்கள் எப்போதும் சிறப்பாக இருக்க வாழ்த்துகிறேன். என்று கூறியுள்ளார். சென்னை அணி நிர்வாகம் அவருக்காக ஒரு விடீயோவைவெளியிட்டு அதில் அன்புடன் ATR என பதிவிட்டுள்ளது.

சற்று முன்