- Advertisement -
Homeகிரிக்கெட்சிஎஸ்கே வெற்றிக்கு பிறகு முதல்வரை சந்தித்த அம்பதி ராயுடு. முதல்வர் ராயுடுவின் விருப்பத்திற்கு அளித்த உறுதி....

சிஎஸ்கே வெற்றிக்கு பிறகு முதல்வரை சந்தித்த அம்பதி ராயுடு. முதல்வர் ராயுடுவின் விருப்பத்திற்கு அளித்த உறுதி. அப்போ இனி விளையாட்டு துறை வேற லெவெல்ல இருக்கும் போலயே என கொண்டாடும் ரசிகர்கள்.

-Advertisement-

இந்தியாவில் கடந்த மார்ச் 31-ஆம் தேதி துவங்கிய 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது கடந்த மே மாதம் 30-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியுடன் முடிவுக்கு வந்தது. அப்படி ரசிகர்களின் மாபெரும் ஆதரவுக்கு மத்தியில் நடைபெற்ற அந்த இறுதிப்போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

இந்நிலையில் கடந்த மே 28 ஆம் தேதி, இந்த ஐ.பி.எல் தொடருடன் தனது ஓய்வை அறிவித்திருந்தார் அம்பத்தி ராயுடு. அது குறித்து அவர் வெளியிட்டிருந்த டீவீட்டில், மும்பை மற்றும் சென்னை அணிக்காக தான் 204 போட்டிகள் விளையாடியதாகவும் அதில் 11 பிலேஆப், 8 பைனல்கள் மற்றும் 5 கோப்பைகள் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் இந்த முறை ஐபிஎல்-இல் சிஎஸ்கே அணி வெற்றி பெற்ற பிறகு கோப்பையை அம்பத்தி ராயுடுவை கொண்டு வாங்கினார் தோனி. இது தோனி ராயுடுவிற்கு செய்த மிகப்பெரிய மரியாதையாக பார்க்கப்பட்டது. இப்படி இருக்க, ஐ.பி.எல் முடிந்த சில நாட்களிலேளேயே மீண்டும் அவர் எல்லா விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்தார். இது உண்மையில் ரசிகர்கள் எதிர்பார்க்காத ஒன்றாக இருந்தது.

இந்நிலையில் தற்போது ஆந்திரா மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து ஐபிஎல் கோப்பை காண்பித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் அம்பத்தி ராயுடு. அப்போது ஜெகன் மோகன் ரெட்டியும் ஐபிஎல் தொடரில் வெற்றி பெற்றதற்காக சிஎஸ்கே அணிக்கும், அம்பத்தி ராயுடுவுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

-Advertisement-

அப்போது ஜெகன் மோகன் ரெட்டியிடம் ஆந்திராவில் விளையாட்டு துறை மற்றும் அதற்கான வசதிகளை மேம்படுத்துவதில் தான் ஆர்வமாக உள்ளேன் என அம்பத்தி ராயுடு விருப்பம் தெரிவித்து இருந்தார். அதற்கு ஜெகன் மோகன் ரெட்டியும் நிச்சயம் உங்களது வேண்டுகோளுக்கான திட்டம் நிறைவேற்றப்பட்டு அதற்கான நடைமுறைகள் அமைக்கப்படும் என உறுதி அளித்தார். இதன் காரணமாக இனி விளையாட்டு துறை நிச்சயம் அடுத்த கட்டத்திற்கு செல்லும் என ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.

இந்தியாவில் நடைபெற்று முடிந்த இந்த பதினாறாவது ஐபிஎல் தொடரில் 15 போட்டிகளில் பங்கேற்று விளையாடிய அம்பத்தி ராயுடு 132 ரன்கள் ஸ்டிரைக் ரேட்டுடன் மொத்தமாக 139 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்