- Advertisement -
Homeவிளையாட்டுஎல்லாமே அவரோட சூழ்ச்சி தான். என்ன அணியில் இருந்து தூக்கிட்டு போயும் போயும் இந்த தமிழ்நாட்டு...

எல்லாமே அவரோட சூழ்ச்சி தான். என்ன அணியில் இருந்து தூக்கிட்டு போயும் போயும் இந்த தமிழ்நாட்டு பிளேயர அணியில போட்டாங்க. அது தான் எனக்கு புரியல – அம்பாதி ராயுடு பேச்சு

- Advertisement-

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 16-வது ஐபிஎல் தொடரில் சென்னை அணி ஐந்தாவது சாம்பியன் பட்டத்தை வென்றது. அந்த தொடரின் இறுதிப் போட்டியோடு அம்பத்தி ராயுடு ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்திய அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக கடந்த 2013-ஆம் ஆண்டு அறிமுகமாகி 2019-ஆம் ஆண்டு வரை 55 ஒருநாள் போட்டிகளிலும் 6 டி20 போட்டிகளிலும் பங்கேற்று விளையாடி உள்ளார். 2018 ஆம் ஆண்டு வாக்கில் இந்திய அணியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் நிச்சயம் 2019 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அந்த உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும்போது அவரது இடத்தில் விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டார். இதன் காரணமாக அணித்தேர்வின் மீது அதிருப்தியடைந்த ராயுடு “நான் இந்த உலகக் கோப்பை தொடரை காண்பதற்காக 3டி கிளாசை வாங்க போகிறேன்” என்று தீர்வு குழுவை விமர்சிக்கும் வகையில் ஒரு டிவிட்டர் பதிவை வெளியிட்டு அதோடு தனது ஓய்வு அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு இந்திய அணியில் தான் தேர்வு செய்யப்படாதது குறித்து தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

2019 ஆம் ஆண்டு உலககோப்பை அணியின் என்னை தேர்வு செய்யாதது அணி நிர்வாகத்தினால் எடுக்கப்பட்ட முடிவு, ஒரு தனிப்பட்ட ஒருவரின் முடிவு கிடையாது என்று நினைக்கிறேன். ஆனாலும் நான் இந்திய அணியின் அப்போது தேர்வு செய்யப்படாததற்கு காரணம் அப்போது தேர்வுக்குழுவில் இருந்த ஒரு முக்கிய நிர்வாகியுடன் எனக்கு ஆரம்பகட்டத்தில் இருந்த மோதல் தான். என்னுடைய கரியரின் ஆரம்ப கட்ட காலத்தில் 2004-2005 சீசனில் விளையாடிய போது தேர்வுக்குழுவில் இருந்த அந்த நபருடன் எனக்கு சுமூகமான உறவு இருந்தது கிடையாது. அவருடன் நிறைய வார்த்தை மோதல்கள், பிரச்சனைகள் இருந்தன.

அவரே நான் 2019-ஆம் ஆண்டிற்கான இந்திய அணியில் தேர்வாகாததற்கு காரணமாக இருக்கலாம் என அம்பத்தி ராயுடு கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : என்னை தேர்வு செய்யாமல் இருந்தால் கூட அந்த இடத்தில் ரகானே அல்லது அதே போன்ற நான்காவது இடத்தில் விளையாடக்கூடிய ஒரு அனுபவமான வீரரை தேர்வு செய்திருக்க வேண்டும். ஆனால் அதனை தவிர்த்து அவர்கள் விஜய் சங்கரை தேர்வு செய்ததை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனெனில் 2019 உலகக்கோப்பையை இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

- Advertisement-

அந்த வகையில் நான்காவது இடத்திற்காக நான் சிறப்பாக தயாராகி வந்த வேளையில் என்னை தேர்வு செய்யாவிட்டால் கூட அந்த இடத்திற்கு நல்ல ஒரு வீரரை தேர்வு செய்திருக்க வேண்டும். நான் விஜய் சங்கருக்கு எதிராக பேசவில்லை ஆனாலும் விஜய் சங்கர் அதற்கு முன்னால் என்ன செய்திருக்கிறார்? அவர் எப்படிப்பட்ட கிரிக்கெட்டை விளையாடி இருக்கிறார் என்று புரிந்து கொண்டிருக்க வேண்டும். ஆறாவது ஏழாவது இடத்தில் இறங்கும் ஒரு வீரரை நான்காவது இடத்திற்காக எப்படி தேர்வு செய்யலாம் என்று அம்பத்தி ராயுடு கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : நான் 3டி கிளாஸ்ஸை டிவிட்டர் பதிவிட்டபோது அனைவரும் விஜய் சங்கருக்கு எதிராகவே பதிவு செய்ததாக நினைத்தார்கள்.

இதையும் படிக்கலாமே: வீடியோ: DRS-கே DRS எடுத்து அம்பயரையே கன்ப்யூஸ் பண்ண அஸ்வின். இவர் எத ரெவியூ பண்ண சொல்றாருனு நேரலையிலேயே கமெண்ட் செய்த வர்ணனையாளர்

ஆனால் நான் அப்படி செய்யவில்லை. தேர்வுக்குழு விஜய் சங்கரை 3டி பிளேயர் என்று தான் எனக்கு பதிலாக தேர்வு செய்தது. அதனால் அவர்களுடைய லாஜிக்கை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று தான் அந்த பதிவினை வெளியிட்டேன். 2019 ஆம் ஆண்டு உலக கோப்பைக்கு முன்னதாக நியூஸிலாந்து ஆஸ்திரேலியா போன்ற மைதானங்களில் விளையாடும் அளவிற்கு நான் நன்றாக தயாராகி இருந்தேன். ஆனாலும் இறுதியில் என்னை தேர்வு செய்யாததில் மிகப் பெரிய வருத்தம் ஏற்பட்டது என ராயுடு கூறியது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்