- Advertisement 3-
Homeவிளையாட்டுஆரஞ்சு கேப் ஜெயிச்சா மட்டும் போதாது.. கோலியால இளம் வீரர்களுக்கு இப்படி ஒரு நெருக்கடி இருக்கு.....

ஆரஞ்சு கேப் ஜெயிச்சா மட்டும் போதாது.. கோலியால இளம் வீரர்களுக்கு இப்படி ஒரு நெருக்கடி இருக்கு.. பத்த வெச்ச ராயுடு..

- Advertisement 1-

ஆர்சிபி பிளே ஆப் சுற்றின் முதல் போட்டியில் தோல்வியடைந்து வெளியேறிய நாள் முதல் தற்போது வரை அவர்களை கடுமையாக விமர்சித்து வருகிறார் சிஎஸ்கே அணியில் ஆடியுள்ள முன்னாள் இந்திய வீரர் அம்பத்தி ராயுடு. ஆர்சிபிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் சென்னை தோற்றதும் வர்ணனையில் ஈடுபட்டிருந்த இவர் கண்ணீர் விட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஆர்சிபி, ராஜஸ்தானுக்கு எதிராக தோல்வி அடைந்து வெளியேறிய சமயத்தில் அவர்களின் தோல்விக்கு காரணம் என்ன என்பதை பற்றி பல்வேறு கருத்துக்களையும் தெரிவித்து வந்தார் ராயுடு. குறிப்பிட்ட மைல்கல்லை எட்டுவதில் மட்டும்தான் ஆர்சிபி கவனம் செலுத்தி வருவதாகவும் கோப்பையை வெல்லும் நோக்கில் நல்ல வீரர்களை தேர்ந்தெடுத்தால் நிச்சயம் அவர்களால் கோப்பையை வெல்ல முடியும் என்றும் விமர்சித்து இருந்தார்.

இதனிடைய சமீபத்தில் இறுதிப் போட்டி முடிந்து கொல்கத்தா அணி கோப்பையை வென்ற பின்னர் கோலியை மீண்டும் ஒருமுறை மறைமுகமாக தாக்கி அம்பத்தி ராய்டு விமர்சித்த கருத்து அதிகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

“மூன்றாவது முறையாக கோப்பையை வென்ற கொல்கத்தா அணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அந்த அணியில் இடம் பெற்றுள்ள சுனில் நரைன், ரசல், ஸ்டார்க் உள்ளிட்ட அனைவருமே நல்ல பங்களிப்பை அளித்து வந்ததால் தான் அவர்களால் கோப்பையை வெல்ல முடிந்தது.

- Advertisement 2-

பொதுவாக ஐபிஎல் தொடரில் ஒரு அணி வெல்ல வேண்டும் என்றாலே அதில் உள்ள அனைவருமே நல்ல பங்களிப்பை அளித்திருக்க வேண்டும். ஐபிஎல் போட்டிகளிலும் நாம் பலமுறை பார்த்தோம். இதனால் அதிக ரன்களை ஒரு சீசனில் அடித்து ஆரஞ்சு கேப்பை வெல்வதால் மட்டுமே கோப்பையை வென்று விட முடியாது. அணியில் உள்ள மற்ற வீரர்களும் 300 முதல் 400 ரன்கள் வரை அடித்தால் தான் நல்ல பங்களிப்பாக இருக்கும்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் ஒரு ஜாம்பவானாக விராட் கோலி இருந்தாலும் அவரை போலவே ஆட வேண்டுமென அணியில் இருக்கும் மற்ற இளம் வீரர்களுக்கு மன அழுத்தத்தை தான் கொடுத்து வருகிறது.

இதனால் இளம் வீரர்களும் நெருக்கடி இல்லாமல் ஆட, தனது தரத்தை கொஞ்சம் கோலி தளர்த்திக் கொள்ள வேண்டும். அப்போது தான் இளம் வீரர்களும் அழுத்தம் இல்லமால் நல்ல பங்களிப்பை அளிப்பார்கள்” என பரபரப்பு கருத்தையும் தெரிவித்துள்ளார் ராயுடு.

சற்று முன்