சி.எஸ்.கே மேட்ச்கு டிக்கெட் வாங்காதீங்க. தல தோனி ஓய்வை அறிவித்தால் நிலமையே மாறும். இத செய்றது தான் பெஸ்ட் – ஆனந்த் சீனிவாசன் சொன்ன அடடே ஐடியா

- Advertisement -

கடந்த ஒன்றரை மாதங்களாக ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடந்து வருகின்றன. மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 ஆவது சீசன் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இப்போது லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாம் இடம் பிடித்து ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்றுள்ளது.

தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி எப்போதுமே, இந்திய அளவில் கிரிக்கெட் ரசிகர்களால் விரும்பப்படும் அணிகளில் ஒன்றாக உள்ளது. அதுவும் இந்த சீசனில் தோனி விடைபெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அந்த அணிக்கு மைதானத்திலும், சமூகவலைதளங்களிலும் கூடுதல் ஆதரவு கிடைத்து வருகிறது.

- Advertisement -

இதனால் எவ்வளவு செலாவானாலும் பரவாயில்லை சிஎஸ்கே விளையாடும் போட்டிகளைக் காணவேண்டும் என சிஸ்கே ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில் சிஎஸ்கே அணி பற்றி பொருளாதார வல்லுனர் ஆனந்த் சீனிவாசன் கூறியுள்ள கருத்துகள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.

அதில் அவர் “தோனி எப்போது வேண்டுமானாலும் ஓய்வு பெறலாம் என்ற நிலைமை நிலவுகிறது. தோனிக்குப் பிறகு சிஎஸ்கே அணியின் கேப்டன் யார் என்பதில் குழப்பம் உள்ளது. தோனிக்குப் பிறகும் இதே அளவுக்கு அணிக்கு ஆதரவு கிடைக்குமா என தெரியவில்லை. சிஎஸ்கே அணியின் உரிமையாளர் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம்தான்.

- Advertisement -

சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா சிமெண்ட்ஸில் இருந்து சிஎஸ்கே அணியைத் தனியாக பிரித்தனர். அதனால் எனக்கு சிஎஸ்கே ஷேர் கொஞ்சம் கிடைத்தது. சிஎஸ்கே அணி விளையாடும் போட்டிகளுக்காக டிக்கெட் வாங்குவதை விட அந்த அணியின் ஷேர்களை க்ரே மார்க்கெட்டில் வாங்கலாம். அதனால் நீண்ட கால நோக்கில் உங்களுக்கு நன்மை விளையும்” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிக்கலாமே: பதிரனா குறித்து தோனி சொன்னது தான் கரெக்ட். மலிங்காவுக்கு முன்னாள் இலங்கை வீரர் தந்த தரமான பதிலடி

இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் மத்தியில், ஆனந்த் ஸ்ரீநிவாசன் மிகவும் பிரபலமாக இருப்பதற்கு காரணம், செலவை குறைத்து சேமிப்பை எப்படி அதிகரிப்பது, எந்த ஷேர்களை வாங்கினால் லாபம் கிடைக்கும் போன்றவை குறித்து இவர் கொடுக்கும் சில ஐடியாஸ் தான். அப்படியான ஒரு நோக்கத்தில் தான் இவர் தற்போது இந்த ஐடியாவை கொடுத்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்