பவுண்டரி, சிக்ஸ் என பறக்கவிட்ட திரிபாதி… ஆனா அடுத்த பந்தே ட்விஸ்ட்- வெளியே போ என சைகை செய்த ரஸ்ஸல்- வீடியோ!

- Advertisement -

நேற்றைய ஐபிஎல் போட்டியில் புள்ளிப் பட்டியலில் கீழே இருக்கும் இரு அணிகளான கொல்கத்தா நைட் ரைடர்ஸும், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்தது. ஐதராபாத் அணியில் நடராஜன் உள்ளிட்ட பவுலர்கள் சிறப்பாக பந்துவீசினர். கொல்கத்தா அணியின் பேட்டிங்கில் கேப்டன் ராணாவும் ரிங்கு சிங்கும் இணைந்து 61 ரன்கள் எடுத்ததன் மூலம் அணி 9 விக்கெட்டுக்கு 171 ரன்கள் சேர்த்தது. ரிங்கு சிங் அதிகபட்சமாக 46 ரன்கள் சேர்த்தார்.

அதன் பின்னர் பேட்டிங் செய்த சன் ரைசர்ஸ் 166 ரன்கள் மட்டுமே சேர்த்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் ஐதராபாத் அணி ஒரு கட்டத்தில் நல்ல ஸ்கோரோடு வெற்றி பெறும் நிலையில்தான் இருந்தது. அந்த அணிக்கு கடைசி 5 ஓவர்களில் 38 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் சொதப்பலான பேட்டிங் காரணமாக 33 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. தொடர்ந்து பவுலிங்கில் அசத்தின் எஸ் ஆர் ஹெச், பேட்டிங்கில் கோட்டைவிட்டு போட்டிகளை இழக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சன் ரைஸர்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ராகுல் திரிபாதி எதிர்பாராதவிதமாக அவுட் ஆனதும் அந்த அணியின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. ஆட்டத்தின் 6 ஆவது ஓவரை கே கே ஆர் அணியின் ரஸ்ஸல் வீசினார். அப்போது ஸ்ட்ரைக்கில் இருந்த ராகுல் திரிபாதி அந்த ஓவரின் முதல் மூன்று பந்துகளை 4,6,4 என அடுத்தடுத்து பறக்கவிட்டார். ஆனால் அடுத்த பந்தில் ஸ்கூப் ஷாட் ஆடி பவுண்டரி லைன் அருகே கேட்ச் ஆகி, தன் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

- Advertisement -

அவர் விக்கெட்டைக் கைப்பற்றிய ரஸ்ஸல் ஆக்ரோஷமாக “வெளியே போ” என்பது போல சைகை செய்து கொண்டாடினார். அவரின் சைகள் அளவுக்கு அதிகமாக மிகைபடுத்தப்பட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்